சிக்கனமான புதுமைவழித் தீர்வுகள்

சிக்கனமான புதுமைவழித் தீர்வுகள்

             கேத்தரின் கிலோன்

            தமிழில்:வின்சென்ட் காபோ

ஒளிரும் புத்தகப்பை
தயாரித்தவர்: அனுஷீலா சகா

சவால்
     தொடர்ச்சியான மின்வெட்டுகளினால் பள்ளிக்குப் பிறகான படிப்பு மாணவர்களுக்கு எளிதானதாக இல்லை.

பயணம்
     டெல்லியைச் சேர்ந்த அனுஷீலா சகா தன்வீட்டில் பணிப்பெண்ணுடன் நடத்திய உரையாடலின்போது, அங்கு ஏற்படும் மின்வெட்டு பிரச்சனையைத் தீர்ப்பதற்கான சிந்தனை அவரின் மூளையில் உதித்தது. சீல் இந்தியா நிறுவனத்தின் புதுமை உருவாக்கத்திறன் தலைவரான அனுஷீலா, ‘’ டெல்லியிலுள்ள பெரும்பாலான குடிசைப்பகுதிகளில் தொடர்ச்சியான மின்வெட்டுகளினால் அங்குள்ள பள்ளி செல்லும் குழந்தைகள் மெழுகுவர்த்தி அல்லது மண்ணெண்ணெய் விளக்கின் மூலம் படிக்கிறார்கள். அசைந்து எரிந்து நின்றுவிடுவது போல் எரியும் சுடரின் ஒளியில் படிப்பது மிக கடினமான காரியம் என்பதோடு, படிப்பின் மீதான ஆர்வமும் வடிந்துபோய், பள்ளியை விட்டு நிற்கிற நிலைவரை செல்கின்றதும் உண்டு ‘’ என்று விரிவாக பேசுகிறார் அனுஷீலா.

     சிறந்த விளக்குகளைக் கொண்ட ஒரு பையை உருவாக்க வேண்டும் என்பது இவரின் ஆசையாக இருந்தது. சூரிய சக்தியை சேமிக்கும் தகடுகளை பையின் முன்பகுதியில் அமைத்து எல்இடி விளக்குகளை அதன் எதிர்புறமாக அமைத்திருக்கிறார். இதன் மூலம் பகலில் சாதாரணமான பை போல இருக்கும் இது, இரவில் விளக்குகளைக்கொண்ட மேஜை விளக்கு போல செயல்படுகிறது. மாணவர்கள் பள்ளிக்குச்  செல்லும்போது பள்ளியில் இருக்கும்போதும், சூரிய சக்தி தொடர்ந்து சேமிக்கப்படுவதில் எவ்வித தடையும் ஏற்படுவதில்லை. திறந்தபள்ளிகளுக்கு செல்லுகிற குழந்தைகளுக்கு இவை வழங்கப்பட்டுள்ளன.

     நீரினால் பாதிப்பு ஏற்படாதவண்ணம் உருவாக்கப்பட்டுள்ள சூரிய சக்தி தகடுகளின் எடை 620 கி. ஆகும். எளிமையாக பயன்படுத்த முடியும் இந்தப்பை மாணவர்களுக்கு தன் ஒளிமூலம் வழிகாட்டுகிறது.

தாக்கம்
     இந்த ஒளிதரும் பைகளை உருவாக்க பை ஒன்றுக்கு ரூ. 1500 செலவாகிறது. சீல் இந்தியா தனது நிதியின் மூலம் உருவாக்கித்தரும் இப்பைகளை தி பாலக் டிரஸ்ட் எனும் அமைப்பு திறந்தபள்ளிகளுக்கு செல்லும் குடிசைவாசி குழந்தைகளுக்கு வழங்கி வருகிறது.


பசுமைப்பயணம்தயாரித்தவர்: சிவராஜ் முத்துராமன்


சவால்
     தொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல் விலையும், நகரத்தில் அதிகமாகும் மாசுபடுத்தலுமே ஆகும்.

பயணம்
     ‘’மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களை மாற்றி அமைப்பது என்பது எனக்கு மிகப்பிடித்தமானது. எரிபொருளின் விலை அதிகரித்துகுக்கொண்டே செல்வது சூழலில் சூரிய சக்தியில் இயங்கும் வாகனம் ஒன்றை மாற்றாக உருவாக்கினால் என்ன என்று தோன்றியது ’’ என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த விற்பனை நிபுணரான சிவராஜ். ஒரு  சைக்கிள் ரிக்சா ஒன்றினை 9000 ரூபாய்க்கு வாங்கி, அதனை சேலம் கொண்டுசென்று வெல்டர்கள் மூலம் பல மாறுதல்களைச் செய்து தன் முதல் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வாகனத்தை தயாரித்தார் சிவராஜ். பின் பல மாறுதல் பணிகளை செய்து, அதன் எடையை குறைத்திருக்கிறார். அதில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தினார் என்று கேட்டபோது,’’ மூன்று இருக்கைகள் கொண்ட சிறிய நானோ கார் போல இருக்கும். சாவியைத் திருகினால் எந்த சத்தமும், மாசுபடுத்தலும் இல்லாமல் பயணிக்க முடியும். சூரிய சக்தியைக் கொண்டு இயங்கும் இந்த வாகனம் 45 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது. மழைநாட்களிலும் எந்த பழுதும் இல்லாமல் இயங்கும் இவ்வாகனம் மின்சாரம், சூரிய சக்தி, காலால் அழுத்தும் பெடல் என மூன்று வித முறைகளின் மூலம் உருவாகும் சக்தி பின்னால் உள்ள லித்தியம் பேட்டரியில் சேமிக்கப்படுகிறது.


தாக்கம்
     ஒரு லட்சரூபாய் செலவாகிறது இந்த வாகனத்தை முழுமையாக உருவாக்க. சென்னை மெரினா கடற்கரையில் பொது மக்கள் பயன்பாட்டிற்கென விலையில்லாமல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாகனமானது, தற்போது சதக் பொறியியல் கல்லூரியில் ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்கான காரணங்களுக்காக அனுப்பப்பட்டு உள்ளது.

                                Thanks:     The new Indian express





  

கருத்துகள்