வளர்ச்சிக்கு பலியாகும் இந்தியாவின் கலாசார தொன்மை!


வளர்ச்சிக்கு பலியாகும் தொன்மை கட்டிடங்கள்! –




Image result for ancient buildings in kolkata



அலங்கார கதவுகள், வேலைப்பாடு ஜன்னல்கள், ரெட் ஆக்சைடு தரைகள், நுட்ப வேலைப்பாடு கொண்ட தூண்கள் என தொன்மை கலாசார கட்டிடங்கள் இந்தியா முழுவதும் எந்த மன உறுத்தலுமின்றி முற்றாக இடிக்கப்பட்டு அதே இடத்தில் விண்ணுயர்ந்த  பிளாட்டுகளும், வில்லாக்களும் எழும்பி வருகின்றன.

மும்பையிலுள்ள ஆர்.கே ஸ்டூடியோ, கொல்கத்தாவின் கெனில்வொர்த் ஹோட்டல், ஸ்ரீநகரிலுள்ள அரசியல் தலைவர் ஷேக் அப்துல்லாவின் வீடு, டெல்லியின் ஹால் ஆஃப் நேஷன் என அடுத்தடுத்த மாதங்களில் அழிக்கப்படவிருக்கும்  தொன்மையான இடங்களின் எண்ணிக்கை நீண்டு வருகிறது. மேற்கத்திய நாடுகள் தங்களின் கலாசாரத்தை பாதுகாக்க, மீட்கவும் அரும்பாடுபடும்போது இந்தியாவில் ஏன் அந்த எண்ணம் இல்லை? “இந்தியர்களில் பெரும்பாலானோர் இன்ஸ்டன்ட் வாழ்வுக்கு ஏங்கி கலாசார அடையாளங்களை இழந்துவருகின்றனர். தனித்துவம் இல்லாமல் வானுயர்ந்து நிற்கும் கான்க்ரீட் சுவர்கள் பெரும் மனத்துயரை ஏற்படுத்துகின்றன” என்கிறார் ஆர்க்கிடெக்ட்டான சங்கீதா கபூர்.

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய அமெரிக்காவின் லைஃப்ஸ்டைலுக்கு மாறி கட்டிடங்களை கட்டுவதில் ஆர்வம் காட்டுகிறோம். இந்தியாவின் ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால், தமிழ்நாட்டின் தஞ்சை பெரிய கோவில், மகாபலிபுரம் சிற்பங்கள், கர்நாடகாவிலுள்ள ஹம்பி கோவில், மைசூரு மாளிகை, ஆந்திராவிலுள்ள பெலும் குகை, திருப்பதி கோவில் என கலாசார தொன்மை இடங்களே நம்மை மதிப்புக்குரிய நாடாக உலக அரங்கில் உயர்த்துகிறது என்பதையும், சுற்றுலா வருமானம் அதிகரிப்பதும் அதன் வரலாற்றுப் பெருமை காரணமாகவே என்பதையும் மனதில் உணரவில்லை என்றால் என்ன செய்வது?

கி.மு.850-கி.மு.1550 வரையிலான காலகட்டத்தில் ராஷ்டிரகூடர்கள், சோழர்கள், கடம்பர்கள், சாளுக்கியர்கள், கில்ஜி, போர்ச்சுகீசியர்கள் ஆகியோரின் தனித்துவமான கட்டிடக்கலை டிசைன்களை இன்றும் இந்தியாவின் ஐகான் கட்டிங்களில் நாம் பார்க்க முடியும். ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கொல்கத்தாவில் லண்டனைப் போன்ற கட்டிடங்களையும், போர்ச்சுகீசியர்கள் வரவால் கோவாவில் லிஸ்பன் நகரைப் போன்ற கட்டிடங்களையும், பிரெஞ்சுகாரர்களின் கலாசாரத்தை பாண்டிச்சேரியிலும் காணலாம்.

“1950-87 ஆம் ஆண்டுகளில் இந்திய மக்கள்தொகையும் பிரமாண்ட கட்டிடங்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்தன. தற்போது ஒரேமாதிரியான கட்டிடங்கள் கட்டப்படுவதால் தூங்கி எழுந்தால் எங்கிருக்கிறோம் என்பதைக்கூட உங்களால் அறியமுடியாது” என்கிறார் கட்டிட வடிவமைப்பாளரான அட்ரிஸ் சக்ரபர்த்தி. இந்தியாவின் தொல்பொருள் ஆய்வுத்துறை(ASI), 3 ஆயிரத்து 650 கட்டிடங்களை பாதுகாக்கவேண்டிய பட்டியலில்(1958 சட்டம்) வைத்துள்ளது. இதோடு கலை மற்றும் கலாசார தொன்மை கட்டிடங்களுக்கான அறக்கட்டளை(INTACH) எனும் தன்னார்வ நிறுவனமும் தொன்மை கட்டிடங்களை பாதுகாக்க பிரசாரம் செய்து வருகிறது.   

- ச.அன்பரசு
நன்றி: டெக்கன் கிரானிக்கிள்

பிரபலமான இடுகைகள்