ஊடகங்களுக்கு நாங்கள் ராவணனாக தெரிகிறோம்
முத்தாரம் Mini
சந்திரசேகர் ஆசாத், ராவண் என இரண்டு
பெயர்களில் உங்களை அழைக்கிறார்களே?
அரசு ஆவணங்களின்படி என் பெயர்
சந்திரசேகர் ஆசாத். ஊடகங்கள் என்னை வில்லனாக காட்ட ராவணன் என அழைக்கின்றன. பாஜக உறுப்பினர்கள்
ராவணன் கொல்லப்படுவான் என்று பகிரங்க கொலைமிரட்டல்களை விடுக்கின்றனர். வழக்குரைஞரான
நான் பீம் ஆர்மி அமைப்பை நடத்தும் எளிய மனிதன் என்பதே உண்மை.
பீம் ஆர்மி பிறந்தது எப்படி?
கன்ஷிராம் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு
எங்கள் இனத்தை காக்க பீம் ஆர்மியை உருவாக்கினோம். உள்ளூர் பள்ளியில் ஆதிதிராவிட மாணவர்கள்
சிக்கல்களை சந்திக்க அவர்களுக்காக இதனை உருவாக்கும் தேவை உருவானது. இதனை பாரத் இக்தா
மிஷன் முன்னர் அழைக்கப்பட்டது. ஆதிதிராவிடர்களுக்கு எதிரான அநீதியை தடுக்க பல்வேறு
மாநிலங்களுக்கு பயணிக்கவிருக்கிறேன்.
இட ஒதுக்கீடு ஆதிதிராவிடர்களில்
குறிப்பிட்ட பிரிவினருக்கு பயனளித்துள்ளது என்கிறார்களே?
இடஒதுக்கீடு பற்றிய அறியாமை பேச்சு
அது. சமநிலை இல்லாத சமூகத்தில் நலிவடைந்த சமூகமான எஸ்சிகளுக்கு இட ஒதுக்கீட்டை அரசியலமைப்பு
உறுதி செய்துள்ளது. இப்படி பாகுபாடு காட்டும் தேசம் எப்படி வளரமுடியும்?
-சந்திரசேகர் ஆஸாத், பீம் ஆர்மி
இயக்கத் தலைவர்.