மகளிர் ஆணையம் மீது அவதூறு பரப்புவது தவறு!
முத்தாரம் Mini
‘#மீ டூ’ வெளிநாடுகளிலிருந்து
இந்தியாவுக்கும் வந்துவிட்டது. இது பற்றி தங்கள் கருத்து?
உலகளவில் #மீ டூ இயக்கம் தொடங்கி
ஓராண்டிற்கு பிறகு இந்தியாவில் பாலியல் தொல்லைகள் பகிரங்கமாகியுள்ளன. பெண்கள் முன்வந்து
தமக்கு நடந்த அநீதியை பேசத்தொடங்கியுள்ளது நல்ல அறிகுறி. நடிகை தனுஸ்ரீ தத்தா பேசத்தொடங்கியதும்
அவரை பெண்கள் கமிஷனிலிருந்து அணுக முயற்சித்தும் முடியவில்லை. எங்களது தொலைபேசி எண்ணைக்
கொடுத்தும் கூட தனுஸ்ரீயின் மேனேஜர் எங்களை இன்றுவரை தொடர்புகொள்ளவில்லை.
கேரளாவின் கன்னியாஸ்த்ரீகள் விவகாரத்தில்
பாவமன்னிப்பை நிறுத்த கோரியுள்ளீர்களே?
பெண்கள் ஆணையத்தின் கோரிக்கைக்கு
பிறகு கிறிஸ்தவ அமைப்புகள் அதில் நாங்கள் தலையிடக்கூடாது என போராடின. பெண்களை மிரட்டுவது
கூடாது என்ற நோக்கத்தை புரிந்த சிலர் எங்களது கோரிக்கையை ஆதரித்தனர்.
மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் குற்றச்சாட்டுகளை எழுப்புவதாக கூறுகிறார்களே?
பாஜக ஆளும் ம.பி,ஹரியானா, உ.பி,
சத்தீஸ்கர், உத்தர்காண்ட் மாநிலங்களிலும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
ஊடகங்கள் எதிர்மறை விஷயங்களையே வெளிச்சமிட்டு
காட்டி எங்களின் பணியை குறை சொல்வதுதான் வருத்தமாக உள்ளது.
-
- ரேகா சர்மா, தேசிய பெண்கள்
ஆணையம்.