காந்தியின் ராமன் வித்தியாசமானவன்!
ராமச்சந்திர குஹா ...... பகுதி 3
காந்தியின் ராமன், பாஜகவின் ராமன் என்ன வித்தியாசம்?
காந்தியின் ராமன் அல்லா என்று கூறக்கூடியவன். உண்மையை அடிப்படையாக கொண்ட எளிமையானவன் என்பதால் அவனுக்கு பிரமாண்ட கோவிலின் தேவை கிடையாது. காந்தி மதத்தை அணுகிய விதத்தில் நிச்சயம் முஸ்லீம்களும் அவரின் கோணத்தை புரிந்துகொண்டிருக்க முடியாது. முக்கியமாக காந்தியின் ராமன் என்பவன் தனித்த மதிப்புள்ள இதயத்திலுள்ள ஒரு பிம்பம்.
காந்தி மென்மையான இந்துத்துவாவை வலியுறுத்தினார் என விமர்சனங்கள் உலவுகிறதே?
பிறர் மட்டுமல்ல முஸ்லீம் லீக்கின் ஜின்னாவும் கூட அப்படி நினைத்தார். ஆனால் இந்து மதத்தை சமூக கட்டமைப்புக்கான கருவியாக பார்த்தவரை இந்து மகாசபை, சங்கராச்சாரியார், இந்து வெறியர்கள் அனைவரும் கடுமையாக எதிர்த்தனர். மதுரை மீனாட்சி கோவிலில் தலித் கோவில் நுழைவுக்காக கலந்துகொண்டதை தவிர்த்து கோவிலுக்கு செல்லாத ஆளுமை. தீவிர சமூக சமய சீர்த்திருத்தவாதியாக இருந்த காந்தியை எப்படி மென்மையான இந்துத்துவவாதியாக கருத முடியும்?
மகாத்மா காந்திக்கு சரளாதேவி சௌதுராணியிடம் உறவு இருந்தது என ராஜ்மோகன் காந்தி எழுதியுள்ளார். இதுபற்றி வரலாற்று ஆய்வாளர்கள் பல்வேறு கருத்துக்களை முன் வைக்கின்றனரே?
காந்தி சரளாதேவியிடம் கொண்ட உறவை ஆன்மிக திருமணம் என்று குறிப்பிடுகிறார். இப்பகுதியை மிகச்சுருக்கமாகவே ராஜ்மோகன் காந்தி குறிப்பிட்டிருக்கிறார். சரளாதேவியின் கணவர் சிறையில் இருந்தபோது காந்தி சரளாதேவியின் வீட்டில் தங்கி இரவு முழுவதும் பேசியபடி இருந்துள்ளனர். சரளாதேவி காந்தியை விரும்பியது உண்மை. அவரின் திருமண வாழ்வுடன் சுதந்திர போராட்ட இயக்கமும் சரளாதேவியுடனான உறவினால் உடையும் அபாயம் இருந்ததால் அதனை கைவிட்டார். இதனை ராஜாஜியும் உறுதிபடுத்தியுள்ளார்.
சுதா பரத்வாஜ் உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்ட நாளில் காந்தி இதனை எப்படி எடுத்துக்கொண்டிருப்பார்?
காந்தி சுதா பரத்வாஜின் கைதை தடுக்க முயற்சித்திருப்பார். இதே முயற்சியை அம்பேத்கரும் கைக்கொண்டிருப்பார். காந்தி வன்முறை, கோபம் ஆகியவற்றுக்கு எதிரான தன்மை கொண்டவர். இந்தியாவை அவரை வைத்திருக்காவிட்டால் பிறநாட்டு மக்கள் அவரை வரவேற்று கொண்டாடியிருப்பார்கள்.
தமிழில்: ச.அன்பரசு
தொகுப்பு: வின்சென்ட் காபோ, பாலாஜி மாதவ்