காடுகளின் பல்லுயிர்த்தன்மையை பாதுகாக்கும் பழங்குடிகள்!

 


பல்லுயிர்த்தன்மைக்கு பாதுகாப்பு! 

உலகில் உள்ள பல்லுயிர்த்தன்மை கொண்ட காடுகளை அரசுகளும் தன்னார்வ அமைப்புகளும், பழங்குடிகளும் பாதுகாத்து வருகின்றனர். ஆர்க்டிக் முதல் தெற்கு பசிபிக் கடல் வரையிலான 80 சதவீத காடுகள் பாதுகாக்கப்படும் நிலையில்தான் உள்ளன.  “ 17 சதவீத காடுகளின் பரப்பை சொந்தமாக கொண்டு அதனை பாதுகாத்து வருபவர்கள் பூர்வகுடியினரான பழங்குடி மக்கள்தான். இவர்கள் அரசுகளை விட சிறப்பாக காடுகளை பாதுகாக்கின்றனர் ” என்றார் உலக காட்டுயிர் நிதியத்தின் முன்னாள் அறிவியலாளரான எரிக் டைனர்ஸ்டெய்ன். 

உலக நாடுகளிலுள்ள அரசுகள், பழங்குடிகள் வாழும் நிலத்தை அவர்களுக்கானதாக கருதுவதில்லை. அப்படி அரசு கருதும்போது அதிலுள்ள பல்லுயிர்த்தன்மையை காப்பது எளிதான பணியாக மாறுகிறது. தொலைநோக்கில் பார்க்கும்போது மலிவான வகையில் அதிக விளைவுகளை, தாக்கத்தை ஏற்படுத்தும் செயல் இது. தொடக்ககால சூழல் பாதுகாப்பு மாநாடுகளில் பழங்குடிகளை யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால் இன்று நிலை மாறி வருகிறது.  கடந்த ஆண்டு பிரான்சில் நடைபெற்ற ஐயுசிஎன் உலக பாதுகாப்பு மாநாட்டில், பழங்குடி மக்கள் முதன்முறையாக பங்கேற்றனர். 2010 முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான அய்ச்சி பயோடைவர்சிட்டி டார்கெட் திட்டத்தில், பழங்குடிகளின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. 



new scientist 16 apr 2022

indigenous protecter

Pinterest



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்