மனப்பதற்றத்தை உண்டாக்கும் மூளையிலுள்ள புரதம்! - மனப்பதற்றத்தை குறைக்கும் வாய்ப்பு





Stress, Anxiety, Depression, Unhappy, Worried, Problem




நம் அனைவருக்கும் இப்போது பெரிய பிரச்னையாகவும், எப்படி சமாளிப்பது என தலையை பிய்த்துக்கொள்வதுமாக இருப்பது மனப்பதற்றம்தான். எதன் காரணமாக மனப்பதற்றம் ஏற்படுகிறது, அதனை எப்படி தீர்ப்பது என யாருக்கும் தெரியவில்லை. இப்போது தியானம், யோகம் என்று பலர் கூறினாலும் பலருக்கும் மனப்பதற்ற குறைபாடு கட்டுப்படுவதாக இல்லை.

அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சிக்குழுவினர் இதற்கான தீர்வை கண்டுபிடித்துள்ளனர். நியூரோட்ராபின்3 என்ற புரதம்தான் நியூரான்களை ஊக்கப்படுத்தி அமிக்தலா பகுதியில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என கண்டுபிடித்துள்ளனர். இதற்கான சோதனையை மக்காவ் வகை குரங்குகளிடம் செய்து பார்த்து திருப்தியாகி உள்ளனர். ஆண்ட்ரூ ஃபாக்ஸ் என்ற ஆராய்ச்சியாளர், நாங்கள் மனிதரில்லா விலங்கிடம் இதனை சோதித்து வெற்றி கண்டுள்ளோம் என்கிறார்.

இங்கிலாந்தில் முப்பது லட்சத்திற்கு மேற்பட்டோர் மனப்பதற்ற குறைபாட்டுக்கு உள்ளாகியுள்ளனர். அமெரிக்காவில் பத்தில் ஒருவருக்கு இக்குறைபாடு உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. விரைவில் மனப்பதற்றக் குறைபாட்டை போக்குவதற்கான செயல்பாடுகள் தொடங்கப்படலாம் என நம்பப்படுகிறது.

நன்றி: பிபிசி எர்த்

 


கருத்துகள்