நாட்டிற்குத் நிச்சயம் தேவை திட்டக்குழுவின் அமைப்பு
நாட்டிற்குத்
நிச்சயம் தேவை திட்டக்குழுவின் அமைப்பு
சி.பி ஜான்
தமிழில்: வின்சென்ட் காபோ
ஆகஸ்ட்
15 ஆம்தேதி சுதந்திர தின உரையில் நரேந்திரமோடி குறிப்பிட்ட பொருள் என்று அனுமானிக்க
முடியாதபடி, அறுபத்துநான்கு வயதான திட்டக்குழுவின் வாழ்வை இறுதி செய்யும் அறிவிப்பை
வெளியிட்டார்.
திட்டக்குழு
தொடங்கப்பட்ட காலத்திலிருந்து அதனைப் பார்க்கும், புரிந்துகொள்ளும்போக்கு ஆட்சிக்கு
ஆட்சி மாறிவந்திருக்கிறது. பா.ஜ.க அரசு திட்டக்குழுவின் செயல்பாடுகளை உள்ளடக்கிய அனைத்தையும்
கலைக்கும்போது, அரசிடம் அதற்கு மாற்றான திட்டங்கள் உண்டு என்ற அனுமானம் அனைவரிடம் இருந்தது.
ஆனால்
ஒரு மாதத்திற்குப்பின்னும் பா.ஜ.க அரசு திட்டக்குழுவிற்கு மாற்றான ஒரு அமைப்பு பற்றிய
எவ்வித சிந்தனைகளையும், கருத்துக்களையும் கூறவில்லை.
நாட்டின் தேசிய திட்டக்குழு என்பது உச்சநிலையான மற்றும்
பல்வேறு சிக்கல்கள் நிறைந்த திட்டங்களை நாடு முழுவதும் செயல்படுத்த உதவுகிறது. சுழன்று
விரிந்து செல்லும் நிர்வாகத்துறைகளை மூன்று வரிசையாக திட்டக்குழு பிரிக்கிறது. 1.மத்திய
அரசு, 2. மாநில அரசு, 3. உள்ளூர் நிர்வாக அமைப்புகள்.
தற்போது
செயல்பட்டுக்கொண்டிருக்கும் பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் முதலீடு எண்பது லட்சம்
கோடியாக உள்ளது. இதில் மத்திய அரசு பாதிக்கும் மேலான தொகையை ஏறத்தாழ நாற்பத்து மூன்று
லட்சம் கோடி வரை அளிக்கிறது. முதல் ஐந்தாண்டு திட்டத்தொகை வெறும் இரண்டாயிரத்து அறுபத்து
எட்டு கோடி மட்டுமே ஆகும். திட்டங்களுக்கான நடைமுறைச் செலவுத்தொகையினை நிதியமைச்சர்
அருண் ஜெட்லி 5. 75 லட்சம் கோடி என்று கூறியுள்ளார்.
மாநில
அரசு கிராமப்புறப் பொருளாதாரத்தை கட்டமைப்பதில் பெரும்பங்காற்றுகிறது. திட்டக்குழு
தன் நேர்மறையான பங்காற்றுதலை சிறப்பு அம்ச திட்டத்தினை பட்டியல் வகுப்புகள் மற்றும்
பழங்குடி மக்கள் துணைத்திட்டத்தினை பட்டியல் வகுப்பிலுள்ள பழங்குடி மக்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.
அரசியல்
சட்டத்தின் எழுபத்து மூன்றாவது பிரிவில் செய்த திருத்தம் காரணமாக மாநில திட்ட நிதி
மற்றும் மாநில வரிவருவாய் ஆகியவற்றினை உள்ளூர் நிர்வாக அமைப்புகளுடன் பகிர்ந்து கொண்டு
திட்டங்களை எளிதாக நிறைவேற்ற முடிகிறது. தேசிய திட்டக்குழு மற்றும் மாநிலத்திட்டக்கழகம்
ஆகிய அமைப்புகள் மாவட்ட திட்டக்குழு உருவாக்கப்படும் முன்னர் அரசியல் சட்டத்தை நிலைநிறுத்தி
செயல்பட்டுக் கொண்டிருந்தன. மாவட்டத்தில் செயல்படுத்தப்படும்
பல்வேறு திட்டங்களையும் தீட்டி அவற்றை செயல்படுத்தும் அதிகாரத்தையும், உரிமையையும்
இந்த அமைப்புகளிடமே இருந்தன.
மோடி
என்ன செய்ய நினைத்திருக்கிறார்? திட்டங்களை தீட்டும் தேசிய திட்டக்குழுவினை கலைத்துவிட்டு,
திட்டங்களை எதன் மூலம் செயல்படுத்த முடியும்?
பதவிக்கு வந்த பா.ஜ.க அரசு நூறு நாட்களைக் கடந்தபின்னும் அதன் அறிவிப்புகளில்
குழப்பமே தொடர்கிறது. நாட்டின் உச்ச திட்டஅமைப்பு ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த தருணத்தில்
ஜனநாயகத்தன்மை கொண்ட திட்டக்குழுவின் நினைவுகள் நமக்கு ஏற்படக்கூடும்.
தேசிய
திட்டக்குழு மத்திய அரசின் நிதிமையப்படுத்தலை தடுத்து பரவலாக்குவதில் முக்கியப் பங்காற்றுகிறது.
மாநில அரசுகளுக்கான சாளரம் போல செயல்படுகிறது. திட்டக்குழுவிற்கு மாற்றாக உருவாக்கப்படும்
அமைப்பு எதிர்காலத்தில் முக்கிய பங்காற்றக்கூடும். ஒரு துறையின் கீழுள்ள அமைச்சர்கள்
மற்றும் அதிகாரிகளை கொண்டு இயங்கி நாட்டின் பல்வேறு பிரிவுகளை ஒருங்கிணைத்து இயக்குவதில் திட்டக்குழு மெச்சத்தகுந்த பணியினை
செய்கின்றது எனலாம்.
திட்டக்குழுவின்
தலைவராகவும், திட்டங்களின் பல்வேறு செயல்பாட்டு சிக்கல்களின்போது அதில்தலையிட்டு தீர்க்கும்
பலம் பொருந்தியவராக பிரதமர் இருக்கிறார். இவருக்குப் பின்னால் இவரின் நிழல்போல திட்டக்குழுவிற்கு
ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதில் உள்நாட்டிலும், வெளியிலும் பல்வேறு தந்திரங்கள்,
மற்றும் சாதுர்யங்களைப் பயன்படுத்தி தீர்க்க முயற்சிப்பவராக உள்ளவர் துணைத்தலைவர் ஆவார்.
திட்டக்குழு
என்பது ஒன்றும் தெய்வீகத்தன்மை கொண்ட புனித பசு அல்ல. பல்லாண்டுகளாக செயல்பட்டு வரும்
திட்டக்குழுவின் சக்கரங்கள் தேய்மானமாகி, அதில் சுறுசுறுப்பின்மை படர்ந்துவிட்டதால்
காலத்திற்கு ஏற்ப அதன் உள்ளடக்கத்தில் புதிய மாற்றங்களை, திருத்தங்களை கொண்டு வரவேண்டும்.
திருத்தங்களை
அதிக கவனத்தோடும், எச்சரிக்கையோடும் செய்ய வேண்டும். பல்வேறு மாநில அரசுகளும் ஆண்டிற்கான
பல்வேறு திட்டங்களை திட்டமிட்டு கையில் வைத்துக்கொண்டு செயல்படுத்துவதற்கான அனுமதி
பெற காத்திருக்கின்றன. பனிரெண்டாவது ஐந்தாண்டு திட்டத்திற்கான திட்டங்களை இன்றே தொடங்கினால்தான்
அடுத்த ஆண்டிற்கான திட்டங்களை வடிவமைக்க முடியும். மத்திய அரசு திட்டக்குழுவினை அமைக்க
தாமதித்தால் ஒட்டுமொத்த தேசமே வளர்ச்சித்திட்டங்கள் தடைபட்டு தடுமாறி நிற்கும் சூழல்
உருவாகும்.
பா.ஜ.க
அரசிற்கான சிந்தனைக்குழு புதிய அமைப்பை திட்டக்குழுவிற்கு மாற்றாக அமைத்து தரும்போது
திட்டங்கள் செயல்படுவதற்கான நிதி, விரிவான திட்டங்களுக்கான நிதி அளித்தல் பற்றியும்
சிந்தித்து திட்டமிட வேண்டும். திட்டக்குழுவின் அமைப்பு மேல் பல குறைபாடுகள் இருக்கலாம்.
பா.ஜ.க அரசு ஏற்படுத்தும் மாற்று அமைப்பைப் பற்றி காத்திருந்துதான் கூறமுடியும்.
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் செப்.14, 2014
கருத்துகள்
கருத்துரையிடுக