ஆன்லைன் ஷாப்பிங்கில் காமெடி!
ஸ்பீக்கருக்கு பதில் லட்டு!
வீட்டிலேயே ஸ்மார்ட்போனில் பொருட்களை
ஆர்டர் செய்து சொகுசாக வீட்டு வாசலுக்கு சென்று வாங்கும் ஆன்லைன் பர்சேஸ் ஆண்டுதோறும்
அதிகரித்து வருகிறது. பில்லியன் டாலர் விற்பனையிலும் பொருட்கள் மாறும் காமெடி அரங்கேறுவதுதான்
சிச்சுவேஷன் காமெடி.
தீபாவளிக்கு ஸ்பீக்கர் வாங்கி
கொண்டாட நினைத்த வாடிகையாளர் ஒருவர், அமேஸானில் ஆர்ப்பாட்டமாக தேடி சலித்து புகழ்பெற்ற
பிராண்டை ஆர்டர் செய்தார். ரூ.7 ஆயிரம் செலுத்தி ஸ்பீக்கர் வாங்கிவிட்டோம் என்ற கெத்தில்
டெலிவரி முகவரி கொடுத்தவருக்கு சில நாட்கள் கழித்து ரூ. 20 மதிப்புள்ள லட்டுகள் மட்டுமே
கிடைத்தன.
“எனக்கு நடந்த அநீதியைப் பாருங்களேன்”
என டென்ஷனான வாடிக்கையாளர் அதை சமூகவலைதளத்தில் படம்பிடித்து போட அமேஸானுக்கு பெரும்
தர்மசங்கடமாக, மன்னிப்பு கேட்டு தவறான பார்சலை மாற்றிக்கொடுப்பதாக கோரியுள்ளது. ஆன்லைன்
டெலிவரிகளில் போலிகளும் புயலாய் உள்ளே புக, வாடிக்கையாளர்களின் போலீஸ் புகார்களும்,
பணத்தை திரும்ப தரும் இக்கட்டும் ஆன்லைன் நிறுவனங்களுக்கு ஏற்படத்தொடங்கியுள்ளது.