ரயில்வே நிலையத்தில் தேசியக்கொடி- அரசின் சாதனை திட்டம்!
ரயில்வே ஸ்டேஷனில் தேசியக்கொடி!
இந்திய ரயில்வே, இந்தியாவிலுள்ள
75 பிசியான ரயில்நிலையங்களில் நூறு அடியில் தேசியக்கொடி கம்பங்களை எமர்ஜென்சி வேகத்தில்
அமைக்கவுள்ளனர். எதற்கு? என்பதுதான் மக்களின் கேள்வியும் கூட.
தற்போது மும்பையில் 7 நிலையங்களில்
தேசியக்கொடி கம்பங்கள் அமைக்கப்பட்டு விட்டன. இதற்கான நிதி ரயில்வே மேம்பாடு திட்டத்திலிருந்து
பெறப்பட்டுள்ளது. “முதல்தர ரயில் நிலையங்களில் நூறு அடி கொடிக்கம்பங்கள் டிசம்பர் மாதத்தில்
அமைக்கப்படும்” என உறுதியாக பேசுகிறார் ரயில்வே போர்டு இயக்குநரான விவேக் சக்சேனா.
“தேசியக்கொடியை ரயில்நிலையத்தில் அமைப்பது எப்படி பயணிகளுக்கு உதவும்?” என நமக்கு தோன்றிய
அதே லாஜிக் கேள்வியை கேட்கிறார் மேற்கு ரயில்வே பயணிகள் கமிட்டி உறுப்பினரான ரத்தன்
போடர். ஏழைத்தாயிடம் மகனிடம் கேட்கவேண்டிய கேள்வி இது!