போன் செய்தால் லைசென்ஸ் ரத்து!






Image result for driving with phone

போன் பேசினால் லைசென்ஸ் ரத்து! –

வண்டி ஓட்டும்போது போனில் பேசினால் ஓட்டுநர் உரிமத்தை மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவெடுத்துள்ளது.

விபத்துகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் போனில் பேசுவது உள்ளிட்ட ஆறுவகை தவறுகளுக்கு மூன்று மாத லைசென்ஸ் ரத்து தண்டனையை புனே-மும்பை எக்ஸ்பிரஸ்வே சாலையில் போக்குவரத்துதுறை அமுல்படுத்தியுள்ளது. விரைவில் நாட்டின் பிற சாலைகளுக்கும் அமுல்படுத்த அரசு யோசித்து வருகிறது.

கடந்தாண்டு மகாராஷ்டிராவில் மட்டும் 35,800 விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 12,200 விபத்துகள் தீவிரமான படுகாயங்களை ஏற்படுத்தியவை. உச்சநீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைத்த கமிட்டி மூலம் இந்திய மாநிலங்களில் ஏற்படும் சாலை விபத்துகளின் அளவை 10% குறைக்க வலியுறுத்தியுள்ளது. இதன் விளைவாக மது அருந்தி வாகனம் ஓட்டுவது, வரம்பு மீறிய வேகம், சிக்னல்களை புறக்கணிப்பது, அதிகளவு பயணிகளை வண்டிகளில் ஏற்றுவது உள்ளிட்ட தவறுகளுக்கு ஓட்டுநர் உரிமம் தடைசெய்யப்படவிருக்கிறது.





பிரபலமான இடுகைகள்