விபத்துகளை தவிர்க்க சுவர்! - ரயில்வே புதிய திட்டம்!
விபத்துகளை தடுக்க சுவர்
குறைந்த கட்டணத்தில் அதிக தொலைவுக்கு
இயக்கப்படும் ரயில்களைக் கொண்டுள்ள இந்திய ரயில்வே, இருப்புபாதைகளில் ஏற்படும் விபத்து
மரணங்களை தடுக்க ஏராளமான திட்டங்களை உருவாக்கி
வருகிறது. அண்மையில் ரயில் நிலையங்களில் 3 ஆயிரம் கி.மீ தூரத்திற்கு பாதுகாப்பு சுவர்
கட்டலாமா? என யோசித்துவருகிறது.
அண்மையில் பஞ்சாபின் தசரா திருவிழாவில்
ஏற்பட்ட இருப்புபாதை விபத்துகளையொட்டி, ரூ.2 ஆயிரத்து ஐநூறு கோடியில் இருப்புபாதையொட்டி
சுவரைக் கட்ட ரயில்வேதுறை அமைச்சர் பியூஸ் கோயலிடம் இந்திய ரயில்வே வாரியம் கோரிக்கை
விடுத்துள்ளது.
இதன்படி நகரம் மற்றும் புறநகர்
ரயில்நிலையங்களில் 2.7 மீட்டர் உயரத்திற்கு சுவர் எழுப்பப்படவிருக்கிறது. “இத்திட்டம்
மூலம் ரயில்களின் வேகத்தின் 160 கி.மீ மற்றும் அதற்கு மேலாக உயர்த்தவும், கால்நடைகள்,
மனிதர்கள் இருப்புபாதைகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும் முடியும்’ என்கிறார் ரயில்வே
போர்டு உறுப்பினரான விஸ்வேஷ் சௌபே.
சுவர் கட்டுவதற்கான திட்டம் முடிவானதும்
ராஷ்டிரிய ரயில் சங்ரக்ஷ்ன கோஷ் என்ற நிறுவனம் மூலம் ரூ.650 கோடி வழங்கப்படவிருக்கிறது.
மேலும் தேவையான நிதி, ரயில்வே சிறப்பு பாதுகாப்பு நிதியிலிருந்து பெறப்படும் என அரசு
அறிக்கை தகவல் தெரிவிக்கிறது.