காவிரிக்கு சிலை - அடுத்த சிலை ரெடி!
காவிரி தாய்க்கு சிலை!
இந்திய அரசு குஜராத்தில் சர்தார்
படேலுக்கு வைத்த சிலை நாடெங்கும் சிலைகளை கட்டும் கான்செப்ட்டை வைரலாக உருவாக்கியுள்ளது.
கர்நாடகா அரசு, மத்திய அரசைப் பின்பற்றி விரைவில் காவிரித்தாய்க்கு சிலையை உருவாக்க
திட்டமிட்டுள்ளது.
இந்திய நகரங்களுக்கு இந்துப்பெயர்
மாற்றம் என்பதோடு, விண்ணுயர சிலைகளை வைப்பது இந்த ஆண்டின் ஸ்பெஷல் கலாசாரம். அண்மையில்
கர்நாடக அரசு 350 அடி உயர காவிரித்தாயை மண்டியா மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜ சாகரில்
உருவாக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கான
கட்டுமானச்செலவு அரசின் பொறுப்பல்ல என அமைச்சர் சிவராஜ்குமார் ஊடகங்களுக்கு பேட்டி
தட்டியுள்ளார்.
காவிரியின் சிலையுடன் பொழுதுபோக்கு
பூங்காவும், ஹம்பி, பெலூர் ஆகிய இடங்களிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க சிற்பங்களையும்
இந்த இடத்தில் உருவாக்க அரசு யோசித்து வருகிறது. ஜெய்ப்பூரைச் சேர்ந்த நிறுவனம் தொடங்கவிருக்கும்
இப்பணிக்கான செலவு ரூ. 2 ஆயிரம் கோடி. நாட்டில் மக்களை விட சிலைகள் அதிகமாயிருச்சு!