அமெரிக்கா செல்வது கஷ்டம்!
இனி அமெரிக்கா செல்வது கஷ்டம்!
–
அமெரிக்காவில் H1B விசா விதிகளை
அதிபர் ட்ரம்ப் மேலும் இறுக்கியுள்ளார். அமெரிக்காவின் திடீர் கெடுபிடியால் இந்தியர்களின்
அயல்நாட்டு கல்வி மற்றும் வேலைக்கான ஸ்பாட்களாக கனடா மற்றும் இங்கிலாந்து நாடுகள் மாறியுள்ளன.
அமெரிக்கர்களின் வாக்குகளைப் பெற
அமெரிக்க பொருட்களை வாங்குவோம், வேலைக்கு அமெரிக்கர்களை அமர்த்துவோம் என தேர்தல் பேரணிகளில்
இனவெறுப்புடன் முழங்கி வருகிறார் அதிபர் ட்ரம்ப்.
“அகதிகளின் குழந்தைகளுக்கு குடியுரிமை
வழங்கும் ஒரேநாடு, அமெரிக்காதான்” என மெக்சிகோ எல்லையில் அமெரிக்காவில் நுழைய காத்திருக்கும்
அகதிகளை எதிர்த்து ஆக்ரோஷமாக பேசியுள்ளார் ட்ரம்ப். அமெரிக்க சட்டத்தின் 14 பிரிவில்
அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை தரும் பிரிவை ட்ரம்ப் மாற்றுவதற்கு
முயற்சிப்பாளர் என்ற அச்சம் தற்போது மக்களிடையே ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்க நிறுவனங்கள்
இந்தியா, சீனா உள்ளிட்ட வெளிநாட்டு பணியாளர்களை பணியமர்த்துவதற்கு பல்வேறு கெடுபிடிகளை
அமெரிக்கா விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.