ஊரடங்கு உத்தரவால் இந்தியா சந்திக்கவிருக்கும் பொருளாதார நெருக்கடி - டேட்டா
தெரிஞ்சுக்கோ!
கொரோனா பாதிப்பால் ஏற்படும் பொருளாதார இழப்பு
ஊரடங்கு உத்தரவால் இந்தியா பெருமளவு மக்களை நோய் பாதிப்பு இல்லாமல் இருக்கிறது. அதேசமயம் நீண்டகாலத்திற்கு ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்துவதும் கடினம். இப்போது கொரோனா பாதிப்பால் ஏற்படும் இழப்புகள் அதிகரித்து வருகின்றன. தற்போது பிஸினஸ் டுடே இதழ் வெளியிட்டுள்ள இழப்பு பற்றிய விவரங்கள் இதோ!
1.இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு மதிப்பு 7 முதல் 8 லட்சம் கோடிகள் ஆகும். உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மூன்று முதல் 4 சதவீதம் வரை.
2. வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தவும் சிகிச்சை அளிக்கவும் இந்திய அரசுக்கு தேவையான தொகை 3 முதல் 5 லட்சம் கோடி வரை. நோய் பாதிப்பு நிதியால் அரசுக்கு ஏற்படும் நிதிப்பற்றாக்குறை 1.5 முதல் 2 சதவீதம் வரை.
3. 2020 நிதியாண்டில் அதிகரிக்கும் நிதிச்சுமையின் அளவு 15 லட்சம் கோடி என்று புள்ளியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. நடப்பு ஆண்டில் ஹோட்டல், ஊடகங்கள் சார்ந்த சேவைத்துறை வணிக பாதிப்பு 24.5 கோடி லட்சமாக உள்ளது.
5. அடுத்த ஆண்டுக்கான செலவு பட்ஜெட் எவ்வளவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்? 30 லட்சம் கோடி ரூபாயாகும்.
6. அடுத்த ஆண்டில் இந்திய அரசு கடன்வாங்க வேண்டியிருக்கும் தொகை 7.96 லட்சம் கோடி.
7. இந்திய மாநிலங்கள் வைரஸ் பாதிப்பால் செலவிடுவதாக அளவிடப்பட்டுள்ள தொகை 40 முதல் 50 லட்சம் கோடி. இத்தொகையை இந்திய அரசு வழங்குகிறது.
பாதிக்கப்படும் துறைகள்
கட்டுமானத்துறை - 8,70,000 கோடி
பணியாட்கள் கிடைப்பது கடினம். இதனால் செயல்பாட்டிலிருந்த அனைத்து பணிகளும் தாமதம் ஆகலாம்.
நகைத்துறை - 5, 20,000 கோடி
கொரோனா பாதிப்பால் தாக்கப்பட்டுள்ள பதினைந்து நாடுகளில் இருந்து மட்டும் நகை வணிகம் மூலம் இந்தியாவுக்கு 50 சதவீத வருவாய் கிடைத்து வந்தது. தங்கம் மற்றும் வைரம் விலை பாதிப்படையும். விற்பனையும் மந்தமாகும். இந்தியாவில் அறுபது சதவீத தங்கம் மற்றும் வைரம் இறக்குமதி மேற்சொன்ன நாடுகளிலிருந்து நடைபெற்று வந்தது.
வாகனத்துறை - 3,59,000 கோடி
70 சதவீத வாகன உதிரிபாகங்கள் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்தே பெறப்பட்டது. எனவே பாதிப்பு கடுமையாகவே இருக்கும்.
பெட்ரோகெமிக்கல் துறை - 2,30,000 கோடி
உள்நாட்டுத்தேவைக்கான 20 சதவீத எண்ணெய் தேவை இப்போது குறைவாகவே உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், விலையைக் குறைக்கவேண்டிய தேவை உள்ளது.
ஹோட்டல் துறை - 1,10,000 கோடி
நோய் பயத்தால் பலரும் எந்த நாடுகளிலும் ஹோட்டல் அறைகளை புக் செய்ய நடுங்குகின்றனர். முழுமையாக நோய் பயம் நீங்கியபிறகு இத்துறை ஏற்றம் காணும்.
விமான சேவை - 99 ஆயிரம் கோடி
உலக நாடுகளிலிருந்து வந்தவர்கள் மும்பை சர்வதேச விமானநிலையங்களில் ஒழுங்காக சோதிக்காமல் விட்டதுதான் மகராஷ்டிரத்தை அதிக கொரோனா பாதிப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது. இத்துறையும் சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நோய் பாதிப்பு குறைந்தால்தான் லாபம் காணும். 30 முதல் 35 சதவீதம் வரை உலக நாடுகளைச் சேர்ந்த பயணிகளை இந்திய விமான நிறுவனங்கள் நம்பியிருந்தன.
ஜவுளித்துறை - 97,000 கோடி
உலகளவில் ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் இப்போது பூஜ்ஜியத்தில் உள்ளன. நோய் பயம் தீர்ந்து சானிடைசர் தெளித்து உடைகளை விற்பது இனிமேல்தான் தொடங்கும்.
வீட்டு உபயோகப்பொருட்கள் - 76 ஆயிரம் கோடி
இந்தியாவில் விற்கப்படும் 50 சதவீதப் பொருட்கள் இறக்குமதிதான். இதன் விற்பனை மையங்கள், இவணிக நிறுவனங்கள் எதுவும் செயல்படவில்லை. அப்புறம் எப்படி விற்பனை உயரும்?
அரசு திட்டங்கள்
ஏழை மக்களுக்கு நிதியாக 1.7 லட்சம் கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி நிலுவைக்காலம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்கு இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்திய உணவுக்கழகத்திடம் கடனுக்கு அரிசி கோதுமை ஆகியவற்றை வாங்கிக்கொள்ளலாம்.
நன்றி - பிசினஸ் டுடே
கருத்துகள்
கருத்துரையிடுக