கொரோனாவுக்கு எதிராக பிளாஸ்மா தெரபி பயன் தருமா?
பிளாஸ்மா தெரபி
இன்னும் உலக சுகாதார நிறுவனம் கான்வலசென்ட் பிளாஸ்மா தெரபி சிகிச்சையை சோதனைதான் செய்து வருகிறது. ஆனால் அதற்குள் உலகம் முழுவதும் இதனை நம்பிக்கையாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பிளாஸ்மா தெரபி என்பது வேறு ஒன்றுமில்லை. கோவிட் -19 பாதிப்பு ஏற்பட்டு குணமானவர்களின் ரத்தத்தில் அதற்கு எதிரான பொருள் உற்பத்தியாகி இருக்கும். இதற்காக அவர்களின் ரத்த பிளாஸ்மாவை எடுத்து பயன்படுத்தினால் பாதிக்கப்பட்டவர்களை வேகமாக குணமடையச் செய்ய முடியும் என நம்புகிறார்கள். சாத்தியமா என்று ஆய்வோம். வாங்க.
அமெரிக்காவின் இந்த பிளாஸ்மாவை எடுத்து ஆய்வுகளைச் செய்ய எப்டிஏ அனுமதி தந்துவிட்டது. பிளாஸ்மாவிலுள்ள அணுக்களை சோதித்தால் அதில் நோய் எதிர்ப்பு பொருளான ஆன்டிபாடி இருக்கும். இதில் உள்ள போராளிகளான ஆன்டிஜென்கள் கொரோனாவை ஒருமுறை எதிர்த்தால் போதும். இந்த நினைவை சேமித்துக்கொள்ளும் ரத்த செல்கள் அடுத்தவரிசை போராளிகளாக களமிறங்கி வைரஸை செயலிழக்கச்செய்ய போராடும். பிசிஜி ஊசி கண்டுபிடிக்க காரணமே இந்த டெக்னிக்தான். இது தற்காலிகமாக உடலை ஆபத்திலிருந்து காக்கும். நோய் எதிர்ப்பு சக்திக்கு உலகிலேயே மாற்று கிடையாது.
நாங்கள் அரசிடம் அனுமதி பெற்று தீவிரமான பாதிப்புக்கு உள்ளாகியவர்களுக்கு மட்டும் பிளாஸ்மா சோதனையை பரிசோதனை முறையில் செய்யவிருக்கிறோம் என்கிறார் ஐசிஎம்ஆர் இயக்குநரான மனோஜ் மர்கேகர். கேரளத்தில் இந்த சோதனையை செய்தவதற்கு மாநில அரசு தயாராக இருக்கிறது. மனிதர்களின் ரத்தத்திலிருந்து பிளாஸ்மா, ஆன்டிபாடி அளவை பிரித்தெடுக்கும் கருவியை ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யவேண்டும். கருவியைப் பெறவும், சோதனையை நடத்தவும் மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை என்பதால் மாநில அரசு மக்களைக் காப்பாற்ற முடியாதோ என பதற்றத்தில் இருக்கிறது.
எபோலா உள்ளிட்ட பல்வேறு உயிர்கொல்லி நோய்களுக்கு எதிராக பிளாஸ்மா தெரபி சிறப்பாக பயனளித்துள்ளதாக உலக சுகாதார நிறவனம் கூறியுள்ளது.
நன்றி - இந்தியன் எக்ஸ்பிரஸ், அபந்திகா கோஷ்
கருத்துகள்
கருத்துரையிடுக