ஏழைகளை தவிக்கவிடும் கந்துவட்டிக்காரர்கள்! - பட்டியலின குடும்பங்களுக்கு நேரும் அவலம்!
பசியால் வாடும் கிராம மக்கள்!
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த புருலியா மாவட்டத்தைச் சேர்ந்த தினக்கூலி செய்யும் மக்கள் பசியால் வாடி வருகின்றனர். இவர்களது கிராமத்தில் செழிப்பாக இருப்பது ஏழைகளைச் சுரண்டி வாழும் கந்து வட்டிக்காரர்கள் மட்டுமே. கோல்கட்டாவிலிருந்து 310 கி.மீ. தூரத்தில் உள்ள சர்ஜூமாடு எனும் கிராமத்தைச்சேர்ந்த மக்கள்தான் இந்த அவலத்திற்கு உள்ளாகி உள்ளனர். இவர்கள் வேலைக்கு பிற மாநிலங்களுக்கு செல்வதிலிருந்து தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்வது வரை அனைத்தையும கந்துவட்டிக்காரர்களிடம் தம் வீட்டுப் பொருட்களை அடமானம் வைத்து பணம் வாங்கி செலவு செய்து வருகிறார்கள். பெரும்பாலும் பட்டியலின மக்கள் 50 குடும்பங்களாக இங்கு வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு மேற்கு வங்க அரசும், மத்திய அரசும் அறிவித்த இலவச அரிசி, கோதுமை ஆகிய தானியங்கள் கிடைக்கவில்லை. அதனை கொடுத்த பணத்திற்கு வட்டி என கந்துவட்டிக்காரர்கள் பிடுங்கி வெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.
நான் ஒடிசாவிற்கு வேலைக்கு செல்வதற்காக வட்டிக்காரரிடம் 5 ஆயிரம் ரூபாய் வாங்கியிருந்தேன். வேலையில்லாத நிலையில் அதனை திருப்பித் தரமுடியவில்லை. இதனால் என்னுடைய ரேஷன் கார்ட்டை அவர் பிடுங்கி வைத்துக்கொண்டார். செப்டம்பர் மாதம் வரை கிடைக்கும் ரேஷன் பொருட்களை என்னால் வாங்க முடியவில்லை. என்னுடைய பிள்ளைகள் இரண்டு நாட்களாக பட்டினி கிடக்கிறார்கள். அதைப் பார்த்துக்கூட எதையும் செய்ய முடியாத கையாலாதவனாக இருக்கிறேன் என்கிறார் தினக்கூலி தொழிலாளரான லசுரேஷ் கலிந்தி.
இதுபற்றி மாவட்ட நீதிபதி ராகுல் மஜூம்தாரிடம் கேட்டபோது, உள்ளூர் நிர்வாகத்திடம் இதுபற்றி விசாரித்து வருகிறேன். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக