நேர்மையில்லாத அரசு துறை! - ஒரு துளி மணலில் ஓர் உலகு
இனிய தோழருக்கு, வணக்கம் நலமாக இருக்கிறீர்களா?
முடிந்தவரை தொடர்ச்சியாக நாட்குறிப்பு எழுத முயலுங்கள். அது பின்னாளில் உங்கள் துறை சார்ந்த விஷயங்களை எழுத உதவும். உங்களது தங்கைக்கு குழ்ந்தை பிறநுதள்ளதூ மகிழ்ச்சியான செய்தி. புதிய மலர்ச்சி பொருந்திய உயிரைப் பாதுகாக்க போகிறீர்கள். குழந்தைகளுக்கு ஏதையும் கற்றுத்தரவில்லை. அவர்கள் வளரும்போது நமக்கும் கற்றுக்கொடுப்பார்கள்.
குடும்பத்திற்க அதிகரிக்கும் செலவு பற்றி பயப்பட்டுக்கொண்டு இருப்பீர்கள். செலவு என்பதை குறைக்க வழி கிடையாது. அதற்கேற்ப சம்பாதிப்பது மட்டுமே இனி உதவும். நவீன காலத்தில் ஒருவருக்கு பிடிக்கிறவராக இருப்பது கடினம். அதற்கு நீங்கள் ஏராளமான பொருட்களை வாங்கிக் கொடுக்கவேண்டும். அனைவரும் ஒருவரையொருவர் சார்ந்தே இருக்கிறோம். தனித்தன்மை கொண்டவன் என நிரூபிக்க பலரும் முயன்றுகொண்டே இருக்கிறார்கள். ஆனால் அது மக்களைப் பொறுத்தவரை அது ஆபத்தில்தான் முடிந்திருக்கிறது. இதை நானாக சொல்லவில்லை. வரலாறு அப்படித்தான் சொல்லுகிறது. அவர்களால் உலகம் நிச்சயமாக நிம்மதியாக இருக்கமுடியாது. அந்தளவு மூளை கொதிப்பான ஆட்கள் உலகை மக்களை சும்மா விடமாட்டார்கள். ஏறத்தாழ நீங்கள் நினைத்தபடி அரசு வேலைக்கு போய்விட்டீர்கள். எனவே முடி கொட்டுவதற்கு முன்பு திருமணத்தை செய்துவிடுங்கள். உங்களுக்கு சொந்தமாக உறவில் பெண்கள் இருப்பதாக சொன்னீர்கள். அப்புறம் மயக்கம் என்ன ராமமூர்த்தி?
மனம், உடலின் தேவை இரண்டும் தீர்க்கும்படியான துணை தங்களுக்கு கிடைக்க இறையைப் பிராத்திக்கிறேன். துர்முகி ஆண்டு பிறந்திருக்கிறது. உங்களுக்கு ஜாதகம் சார்ந்து நம்பிக்கை கிடையாது. வீட்டில் இருப்பவர்களைப் பார்த்து கவனமாக திருமணத் துணையைத் தேர்ந்தெடுக்க சொல்லுங்கள். வாழ்க்கை நன்றாக இருக்கவேண்டும் அல்லவா? வண்ணதாசன் சொல்வதை அப்படியே சொல்லுகிறேன். நல்லா இருங்க!
சந்திப்போம்.
ச.அன்பரசு
8.4.2016
**************************************************************************************
நான் உண்மையில் கஷ்டப்பட்டு படித்தேன். அதனை நீங்கள் அருகிலிருந்து பார்த்திருக்கிறீர்கள். எனக்கு பெரிய ஆதரவு கிடையாது. சாதியிலும் உறுதுணை உற்றதுணை யாருமில்லை. இந்த நேரத்தில் எனக்கு கிடைக்கும் வேலை, அதுசார்ந்த பொருளாதாரம் மட்டுமே என்னை காப்பாற்றும் நிலை. அந்த விஷயத்தில் என் உழைப்பிற்கான பலன் கிடைத்தது. உங்களைப் பொறுத்தவரை நீங்கள் பேசும் விஷயங்கள் என்னை ஆச்சரியப்படுத்தியுள்ளன. பத்திரிகையில் நீங்கள் உட்காருவீர்கள் என நம்பினேன். நான் நினைத்தாற்போலவே நீங்களும் இதழியலில் ஓர் அங்கமாக ஓடத் தொடங்கிவிட்டீர்கள். ஆச்சரியமாக இருக்கிறது. நாம் இருவரும் கருத்திபாளையத்திலுள்ள அந்த சிறிய வீட்டில் ஓஷோவின் எழுத்துகள் பற்றி விவாதித்தது அடிக்கடி என் நினைவிற்கு வந்து போகிறது. அந்த ஊரின் பல்வேறு இடங்களில் நாம் பல்வேறு நூல்களைப் பற்றி பேசியுள்ளோம். நிறைய நூல்களை நீங்கள் படித்துவிட்டு எனக்கு அறிமுகப்படுத்தினீர்கள். அதற்கு நான் என்றுமே நன்றியுடையவன் ஆவேன்.
ஆசையோடு நான் புள்ளியல் துறையில் படித்து வேலைக்கு வந்தேன். ஆனால் இங்கு அனைத்தும் தவறாக உள்ளது. உறுதியாக நான் என் பணியை செய்து வருகிறேன். எனக்கு அப்போதுதான் வாங்கிற காசுக்கு தின்கிற சோற்று பருக்கைகள் செரிக்கும். உங்களுக்கே தெரியும் நான் பெரியாரின் தொண்டன். கருப்புச்சட்டைதான் எனக்குப்பிடித்த ஒரே சட்டை. என்னிடமிருந்த ஒரு சட்டையை அது கிழியும் வரை எப்படி ஆவேசத்தோடு அணிந்திருப்பேன் என்பதை அறிந்திருப்பீர்கள். மனசாட்சிப்படி நேர்மையான நடப்பது ஒருவருக்கு மிக அவசியம். அவரின் ஜாதகப்படி அவர் நடந்துகொள்வார் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. பெண் பார்க்கும் சடங்கில் நான் அவற்றை வலியுறுத்தவரும் போவதில்லை.
நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? உங்களுக்கும் எனக்கு வயது வித்தியாசம் கிடையாது. அப்படியெனில் நீங்கள் எப்போது திருமணம் செய்யப் போகிறீர்கள்?
நன்றி!
அ.ராமமூர்த்தி
10.4.2016
கருத்துகள்
கருத்துரையிடுக