தேகம் வெளிப்படுத்தும் பன்முக கதாபாத்திரங்கள் - தேகம் - சாருநிவேதிதா






தேகம்


சாருநிவேதிதா


இந்த நூல் முழுக்க வரும் மனிதர்கள் உடலால் பாதிக்கப்படுகிறார்கள். இதன் விளைவாக அவர்களின் மனதில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களை எழுத்தாளர் பதிவு செய்திருக்கிறார்.


தர்மா, சேரியில் பிறந்து வளர்ந்து பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளராக இருக்கிறான். பல நாட்கள் தக்காளியை சாப்பிட்டு கிடந்தாலும், அவனுக்கு ஏராளமான வெளிநாட்டு ரசிகைகள் உண்டு. அப்படி கிடைக்கும் இரண்டு ரசிகைகள் அவனது வாழ்க்கையில் முக்கியமானவர்கள். பாரிசிலிருந்து வரும் செலின், டில்லியைச் சேர்ந்த நேஹா. இருவரின் செலின் காதல் கொண்டு காமம் சுகித்து திருமணமாகி பின்னாளில் காணாமல் போகிறாள். இதில் நேஹா பாலியல் சீண்டல்களுக்கு காலம் முழூவதும் ஆளாகி தர்மா மீது காதல் கொண்டு அப்புறமாக பைத்தியம் பிடித்து அங்கேயே தற்கொலை செய்து கொண்டு இறக்கிறாள்.


இவை நமக்கு கடிதம் மூலமாக சாரு சொல்லும் தகவல்கள்தான். இவையன்றி தர்மா செய்யும் வேலை, பன்னி குத்துவது, நாய் பாஸ்கருக்காக குற்றவாளிகளை டார்ச்சர் செய்வது, ஆழ்வாருடன் பெரிய ஹோட்டல்களில் சரக்கு அடிப்பது. பஸ்ஸில் பெண்களுடன் உரசி சுய இன்பம் செய்வது என வாழும் வாழ்க்கை வாசிக்கும் பலருக்கும் திகைப்பாக இருக்கும், ஆனால் படிக்கையில் பெரிய தயக்கங்கள் இன்றி எளிமையாக படித்துச்செல்ல முடிகிறது. காரணம், சாரு நிவேதிதான் வாக்கிய அமைப்புகள்தான். சரளமாக விஷயத்தை உள்வாங்கிக்கொள்ள உதவுகிறது.


உடல் சார்ந்த புதிய அனுபவம் தேடுபவர்களுக்கு தேகம் நாவல் தேடலை முடித்து வைக்கிறது.


கோமாளிமேடை டீம்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்