சீன ராணியை தடுக்கும் மர்மக் கொலைகாரன்! - டிடெக்டிவ் டி மிஸ்டரி ஆஃப் பாண்டம் ஃபயர்




டிடெக்டிவ் டி

மிஸ்ட்ரி ஆஃப் பாண்டம் பயர்


சீனாவின் அரசு அமைப்பு, அங்கு ராணி சில நாட்களில் பதவியேற்க நினைக்கிறார். ஆனால் அதனை ஆண் தலைவர்கள் ஏற்க மறுக்கின்றனர். அங்கு பெரும் புத்த சிலை ஒன்று தயாராகி வருகிறது. இதனைக் கட்டி முடித்து ராணியாக நாட்டிறகு பதவி ஏற்பது ராணியின் கனவு. ஆனால் அங்கு நடைபெறும் விசித்திரமான நிகழ்வால், இரண்டுபேர் பலரின் முன்பு எரிந்து சாகின்றனர். இதற்கு காரணம் என்ன என்பதை சிறைக்கைதியாக இருந்து விடுதலை பெறும் துப்பறிவாளர் டி கண்டுபிடிக்கிறார். இதுதான் கதை.


மர்மக்கதை. சிறப்பாக படம்பிடித்து கிராபிக்ஸ் செய்து மிரள வைத்திருக்கிறார்கள். சீனாவின் அரியணைக்கு ஏற்படும் போட்டி, பல்வேறு ஒற்றர்கள், உளவாளிகள், துப்பறிவாளரைக் கொல்ல முயலும் மர்ம கொலையாளி, வேதிப்பொருட்களை பயன்படுத்தி தலைவர்களைக் கொல்வது, சில ஊசிகளைப் பயன்படுத்தி முகத்தை மாற்றிக்கொள்வது, மந்திரியாக மான் வந்து ராணிக்கு ஆலோசனை சொல்வது என படத்தில் நிறைய ஆச்சரியங்கள் உள்ளன.


நிறைய செல்வு செய்து, பிரமாண்டத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். ராணிக்கு எதிராக செயல்பட்ட கைதியை வைத்து குற்றவழக்கை புலனாய்வு செய்யும் ராணியின் தந்திரம். அவரை வேகமாக செயல்பட செய்ய பல்வேறு தந்திரங்கள் செய்வது, தனக்கு எதிரான ஆட்களை தந்திரமாக கொல்வது என ராணிதான் கொலையாளியோ என காட்சிகள் யோசிக்க வைக்கின்றன.


ராணி தன்னை கைது செய்து எட்டு ஆண்டுகள் அடைத்து வைத்தாலும் அவருக்கு செய்து கொடுத்த வாக்குப்படி நேர்மையாக பணி செய்யும் டி, எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள்தான் படத்தை பார்க்கும்படி செய்கின்றன. பராரி போல வந்து ராணியிடம் பேசுவது, பதவி ஏற்று உளவு பார்க்கும் பெண்ணை மிரட்டுவது, ஒற்று அறிவதை தடுக்கும் ஐடியாக்கள் என துப்பறிவாளர் டி ஆச்சரியப்படுத்துகிறார்.


இறுதியில் வில்லன் வென்றே விடும் நிலையில் டி எப்படி ராணியைக் காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தை அருமை என்று சொல்ல வைக்கிறது. ராணியைக் காப்பாற்றும் ஏற்படும் முயற்சியில் துப்பறிவாளர் உடல் முழுவதும் பாதிக்கப்பட்டு விட அவர், பாதாள உலகிற்கு சென்று விட நேர்கிறது.,


கொலைக்குற்றம் பற்றிய பிரமிப்பு ஏற்படுத்தும் புலனாய்வு படம்.


கோமாளிமேடை டீம்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்