ரியலும் ரீலும் - நமது நம்பிக்கைகளில் எவை உண்மை, எது உடான்ஸ்? - மிஸ்டர் ரோனி பதில்கள்



மிஸ்டர் ரோனி
ரியலும் ரீலும்


1.கேரட் சாப்பிட்டால் கண்பார்வை நன்றாக தெரியும்


ரியல் - உண்மையில் வைட்டமின் ஏ சத்தை உடலுக்கு ஈர்த்து கொடுக்கும் பீட்டா கரோட்டின் கேரட்டில் உள்ளது. ஆனால் உடல் கேரட்டை கிலோ கணக்கில் நீங்கள் சாப்பிட்டாலும் குறிப்பிட்ட அளவோடு உட்கிரகிப்பதை நிறுத்திவிடும். எனவே கேரட்டை மட்டும் சாப்பிடாமல் அதோடு சேர்த்து பச்சைக் காய்கறிகளை நிறைய சேர்த்து சாப்பிடுங்கள். கண்களும் உடலும் சேர்ந்து பலம் பெறும்.


2.சர்க்கரையை அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வந்துவிடும்


ரியல் - சர்க்கரையில் செய்த பலகாரங்களை அல்லது சர்க்கரையை அள்ளி தின்றால் நேரடியாக உடல் பாதிக்கப்படாது. உடல்பருமன் பிரச்னை ஏற்படும் இதன் மறைமுகவிளைவாக நீரிழிவு நோய் ஏற்படும். இதனால் லட்டு, ஜிலேபி, பால்கோவா, பாதுஷா ஆகிய பலகாரங்களை இலவசமாக கொடுத்தாலும் அளவோடு சாப்பிடுங்கள். மூக்கு பிடிக்க சாப்பிட்டால் கஷ்டப்படப்போவது நீங்கள்தான்.


3.தீப்புண்ணுக்கு ஐஸ் வைக்கக்கூடாது


ரியல் - ஆம் அப்படி வைத்தால் அப்புண் மேலும் பெரிதாகி பிரச்னை தரும். தீப்பட்ட புண்ணை சாதாரண நீரில் கழுவி ஆன்டி செப்டிக் க்ரீம்கள் போட்டால் போதும். அதுவே புண்ணைக் குணமாக்கும்.


4.மாரடைப்பு வந்தபிறகு தினந்தோறும் உடற்பயிற்சி செய்யவேண்டும்.

ரியல் - நீங்கள் உடற்பயிற்சிகளை சரியாக செய்யாமல்தானே உடல் சீர்கெட்டு மாரடைப்பு வருகிறது. எனவே மருத்துவரிடம் ஆலோசித்து சரியான உடற்பயிற்சியை செய்தால் இதயத்தோடு உடலும் ஆரோக்கியத்திற்கு திரும்பும்.


5. குறைந்த வெளிச்சத்தில் படித்தால் கண்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும்.


ரியல் - இதற்கு எந்த வித அறிவியல் ஆதாரங்களும் கிடையாது. உண்மையில் குறைந்த வெளிச்சத்தில் படித்தால் கண்கள் சோர்வுறும் என்பது மட்டுமே உண்மை. கண்கள் பாதிக்கப்படுவது ஒளி நேரடியாக கண்களில் படுவது, கணினியில் பணிபுரியும் கோணம், நீங்கள் நூல்களை எப்படி வைத்து படிக்கிறீர்கள் ஆகியவையும் இதில் முக்கியம்.


6. தினந்தோறும் எட்டு டம்ளர்கள் தண்ணீர் குடிப்பது அவசியமில்லை.


ரியல் - உண்மைதான். உங்களின் அளவு, அன்றைய நாளின் சூழல் ஆகியவற்றைப் பொற8உத்தே தண்ணீர் குடிப்பது அமையும். இதனால் இத்தனை டம்ளர்கள் என்று எண்ணாமல் தாகம் எடுத்தால் குடியுங்கள். மேற்படி எட்டு டம்ளர் கணக்கு பலருக்கும் பொருந்தாத ஒன்று.


7. ஆண்டுக்கு ஒருமுறை சீசன் மாறும்போது ஃப்ளூ வைரஸ் தாக்குதல் நம்மைத் தாக்கும் வாய்ப்புள்ளது.


ரியல் - உண்மைதான். பருவகாலங்கள் ஆண்டுதோறும் மாறும்போது ஃப்ளூ வைரஸ் கூட தன் செயல்பாட்டை மாற்றிக்கொண்டே இருக்கிறது. இதனால் தடுப்பூசி போட்டவர்களும் கூட நோய்த்தாக்குதல்களுக்கு உள்ளாகிறார்கள். எனவே இக்காலங்களில் கைகளை சோப்பு போட்டு கழுவுவதோடு, முகத்திற்கு மாஸ்க் கட்டி வலம் வாருங்கள். இது உங்களை பிறரிடமிருந்தும், பிறரை உங்களிடமிருந்தும் காக்கும்.


8. கருப்பாக இருப்பவர்களுக்கு தோல் புற்றுநோய் ஏற்படாது


ரியல் - மெலனின் அதிகமாக இருப்பதால் அவர்களின் தோல் கருப்பாக இருக்கிறது. அதற்காக புற ஊதாக்கதிர்கள் அவர்களின் தோலில் அளவுக்கு அதிகமாக பட்டால் அவர்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. இதனால் அனைத்து வகை நிறம் கொண்டவர்களும் சன்ஸ்க்ரீன் லோஷன்களை பயன்படுத்த வேண்டும்.


9. பார் சோப்புகளில் கிருமிகள் இருக்கும்.


ரியல் - அதனை எடுத்து பாத்திரங்களை, துணிகளை துவைக்கும்போது உங்கள் கைகளில் கிருமிகள் இருக்கலாம். சோப்புகளின் மீது பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சைகள் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை.


10. நேராக அமர்ந்து இருப்பது முதுகிற்கு ஆபத்து.


ரியல் - உண்மைதான். நீங்கள் இதற்கு எதிர்மறையாக உங்கள் உடற்பயிற்சி ஆசிரியர் சொல்லி கேட்டிருப்பீர்கள். உண்மையில் சுவற்றில் பல்லியைப் போல அப்படியே நிமிர்ந்து உட்காராமல் கொஞ்சம் ஆடி, அசைந்து அரைமணிநேரத்திற்கு ஒருமுறை உடலின் நிலையை மாற்றிக்கொண்டு இருக்கவேண்டும். இல்லையெனில் முதுகுக்கு பாதிப்பு உறுதி.


நன்றி - ரீடர்ஸ் டைஜெஸ்ட் ஏப்ரல் 2020

ஆங்கிலத்தில் மரிசா லாரிபெர்டா



கருத்துகள்