மன அழுத்தம் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்கள்!
மனநலன்
மனம் சார்ந்த பல்வேறு பிரச்னைகளை டிஸ்ஆர்டர் என வகைப்பபடுத்துகின்றனர். ஒருவரின் மனநிலை மாறிக்கொண்டே இருப்பது. அதீத மகிழ்ச்சி, அதீத சோகம், கற்பனைக் காட்சிகளில் திளைப்பது, தானாகவே பேசிக்கொண்டு இருப்பது ஆகியவற்றை இந்த வகைப்படுத்தலாம். இதற்கான மருத்துவர்கள் இன்று பெருகியுள்ளனர். பிரச்னைகளும் அந்தளவு பெரிதாகியுள்ளது.
மன அழுத்தம்
இரண்டு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் மகிழ்ச்சி அற்ற நிலை. செய்யும் பணிகளில் சுரத்தே இருக்காது. என்னவோ போடா மாதவா என்று செய்வார்கள். நம்பிக்கை இருக்காது. உலகமே கைவிட்டது போல நடந்துகொள்வார்கள். சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார்கள். இம்மனநிலை தீவிரமாகும்போது தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்வார்கள். அல்லது தற்கொலை செய்துகொள்வார்கள்.
உள்நிலை காரணங்கள்
ஆளுமை சார்ந்த பிரச்னைகள், நம்பிக்கையின்மை இருக்கலாம்.
குடும்பத்தில் பெற்றோர் அல்லது உறவினர்களுக்கு மன அழுத்த பிரச்னை இருந்திருக்கலாம்.
உடலில் நாட்பட்ட வியாதிகளின் பிரச்னை மன அழுத்தத்தை
உருவாக்கலாம்.
சிறுவயதில் ஏற்பட்ட வறுமை, மோசமான சம்பவங்கள், ஆதரவற்ற நிலைமை.
வெளிக்காரணங்கள்
அன்பான நண்பர்கள், உறவினர்கள், செல்லப்பிராணிகளின் அகால மரணம்.
குடிநோய்க்கு அடிமையாகி சமூக பிரச்னைகளை எதிர்கொள்வது.
உடலில் ஏதேனும் ஊனம், நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு தனிமையில் வாடுவது, வயதானவர்களுக்கு இந்த நிலை அடிக்கடி ஏற்படுகிறது.
புதிதாக கருவைச் சுமக்கும் தாய்மார்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.
கடன்தொல்லை, வருமானம் போதாமை
நெருங்கிய உறவுகளில் ஏற்படும் பிளவு, பிரச்னை, முட்டல், மோதல்.
வேலைவாய்ப்பினமை, கிடைத்த வேலையில் தன்னை நிரூபிக்க முடியாமல் தடுமாறுவது, சமூக அழுத்தங்கள்
கண்டறிவது எப்படி?
உங்களுக்குள் பிரச்னை இருப்பதாக ஒத்துக்கொண்டால் உளவியல் நிபுணர் அதற்கு தீர்வளிக்கமுடியும். அவர் பல்வேறு மணிநேர தெரபிகளை உங்களுக்கு வழங்குவார். மன அழுத்தம் குறைத்து தூங்க வைக்கும் மாத்திரைகளை வழங்குவார். உலகம் முழுக்க 350 மில்லியன் மக்களுக்கு மன அழுத்த பாதிப்பு உள்ளது. மன அழுத்தம் தொடக்கநிலை, முதிர்ச்சியடைந்த நிலை என அறிகுறிகளைப் பொறுத்து சிகிச்சைகள் மாறுபடும்.
கருத்துகள்
கருத்துரையிடுக