காதலியை கரம்பிடிக்க போராடும் தனிக்குரல் நகைச்சுவைக் கலைஞனின் கதை! - தி பிக் சிக்




தி பிக் சிக்

கதை, திரைக்கதை குமாயில் நினன்சானி, எமிலி வி கார்டன்

அமெரிக்க நகைச்சுவை நடிகரான குமாயில் நினன்சானி, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். அவர் எப்படி தன் மனைவி எமிலியை திருமணம் செய்தார் என்பதை சொல்லும் படம் இது.


தனிக்குரல் கலைஞராக உள்ள குமாயில், அதுபோன்ற நிகழ்ச்சி ஒன்றில் எமிலியைச் சந்திக்கிறார். பெண்களுக்குத்தான் சிரிக்க வைக்க ஆண்கள் தேவை ஆயிற்றே. சிரித்து பேசுபவர்கள் அன்று நைட்டே ட்யூரக்ஸ் பாக்கெட்டை பிரித்து சமாச்சாரத்தை திருப்தியாக முடிக்கிறார்கள். குமாயில் தனிக்குரல் கலைஞராக முயன்றுகொண்டே ஊபர் டாக்சி ஓட்டி வாழ்க்கையை நடத்தி வருகிறார்.


அவர் வீட்டில் அவருக்கு பெண் பார்க்கிறார்கள். ஆனால் அந்தப் பெண் அவருக்கு பிடிக்கிறவள் என்பதை விட முஸ்லீமாகவும், பாகிஸ்தானைச்சேர்ந்தவராகவும் இருக்கவேண்டுமென நினைக்கிறார்கள். குமாயிலை முடிந்தவரை தாடி வைக்க சொல்லுகிறார்கள். இப்படிப்பட்ட மரபான குடும்பத்தில் பிறந்தவர், எமிலியை எப்படி கல்யாணம் செய்கிறார் என்பதை நவரசங்களும் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.


ஆஹா

தனது மரபான குடும்பம் பற்றித்தான் தனிக்குரல் நகைச்சுவை செய்து பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறார். அதுவேதான் அவரின் வாழ்க்கையிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவருக்கு அவரது அம்மா நிறைய பெண்களை அறிமுகப்படுத்தி வைக்கிறார். அதை தவிர்க்கும் காட்சி. எமிலியோடு பிரிவதாக சொல்லி அவரது அறையிலேயே தங்கும் காட்சி, அவரின் உடல்நலம் பாதிக்கப்படும்போது பதறி அவரைப் பார்த்துக்கொள்வது என எங்கும் குமாயிலின் ஆட்சிதான்.


குடும்பத்தைப் பிரிந்து நகைச்சுவை நிகழ்ச்சிக்காக நியூயார்க் போவதற்கு முன்னர், எமிலியை சந்தித்து அவருக்காக மாறியுள்ளேன் என்று கூறும் காட்சி, விரக்தியில் பீட்ஷா கடையில் விற்பனையாளரை கண்டபடி திட்டுவது என உணர்ச்சிகளை சிறப்பாக காட்டி நடித்துள்ளார். ஸ்டூபர் படத்தில் அவரது நடிப்பை பார்த்து இந்த படத்தை தரவிறக்கி பார்த்தோம். மோசமில்லை.


முஸ்லீம்களை ஆங்கிலேயர்கள் எப்படி பார்க்கின்றனர் என்பதை எமிலியின் பெற்றோர் மருத்துவமனையின் உணவகத்தில் பேசும் பேச்சு காட்டுகிறது. அதோடு மரபான பாகிஸ்தானியர்கள் ஆங்கிலேயர்களை திருமணம் செய்துகொள்வதில் தயக்கம் கொள்வதையும் குமாயிலின் சகோதரர் நவ்நீத் பேசும் காட்சி நேரடியாகவே தெரிவிக்கிறது.


ஐயையோ


கோமாவில் வீழ்ந்த காதலி அத்தியாயம் படத்தில் சோகமான கட்டம். ஆனால் அதுவே பார்வையாளர்களையும் அய்யோ ராமா இது முடியாதா என எரிச்சலடைய வைக்கிறது. டிவி சீரியல் போல இந்த காட்சிகள் நீள்கின்றன.


காமெடி மருந்து


கோமாளிமேடை டீம்


கருத்துகள்