உளவியலை தீர்மானிக்கும் மரபணுக்கள்!
உயிரியல் சார்ந்த உளவியல்
பொதுவாக ஒருவரின் ஆளுமைகள்
எப்படி இருக்கிறது என சோதிப்பதற்கு நிறைய முறைகள் உள்ளன. ஆனால் ஒருவர் பிறரை பாதிக்கும்வண்ணம்
நடந்துகொள்கிறார் என்றால் அவருக்கு உயிரியல் ரீதியாக பிரச்னைகள் இருக்கலாம். அதாவது,
டிஎன்ஏ, மரபணுக்கள் ரீதியாக. இம்முறையில் இரட்டையர்களாக பிறந்தவர்களை சோதித்தபோது,
அவர்களின் இளம் வயது வாழ்க்கை ஒன்றுபோலவே இருந்தது கண்டறியப்பட்டது.
இரட்டையர்களை தனியாக பிரித்து
வளர்த்தபோதும் கூட அவர்களின் குணநலன்களிலும், பழக்க வழக்கங்களிலும் பெரிய மாறுதல்கள்
அவர்களின் பெற்றோர்களோ, சூழல்களோ, நண்பர்களோ ஏற்படுத்த முடியவில்லை.
இவர்களின் மூளைகளை படமாக்கல்
தொழில்நுட்பத்தில் சோதித்துப் பார்த்தபோது, வயதானவர்களை விட வேகமாக முடிவெடுப்பதும்,
அதுபற்றிய சமூக விளைவுகளை அறியாதவர்களாகவும் இருந்தனர். செயல்களுக்கான விளைவுகளை எதிர்கொள்ளும்போது
தீவிரமான பதற்றத்திற்கு ஆட்பட்டிருந்தனர் என்று தெரிய வந்தது. இத்தகைய சோதனைகள் மூலம்
பார்க்கின்சன், ஸிசோபெரோனியா, மன அழுத்தம், போதைபொருள் பயன்பாடு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
செய்யும் சிகிச்சை முறை மேம்பட்டது. காரணம், இந்த நோய் பாதிப்பு கொண்டவர்களுக்கு உடலும்,
மனமும் ஒன்றுசேர பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
உளவியலின் மேம்பாடு என்பது
பல்வேறு காரணிகளைச் சார்ந்தது. அவரின் மொழி, சுய விழிப்புணர்வு, நினைவுகள், அவர் வாழும்
சூழல் ஆகியவை முக்கிய காரணங்களாகும்.
இயற்கையான தேர்வு
சார்லஸ் டார்வினின் பரிணாம
வளர்ச்சி விதியான வலிமையுள்ளதே எஞ்சும் என்பதன் படி உயிர்களுக்கு அடிப்படையான தன்மைகள்
உருவாகின்றன.
உளவியல் தேர்வு
இந்த பிரிவில் உயிரினங்களின்
புத்திசாலித்தனம் பற்றி குறிப்பிடப்படுகிறது. ஒருவர் தனது பாலுறவுக்கான இணையை எந்த
அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறார் என்பது முக்கியமானது. இதற்கு பல்வேறு அம்சங்களை அவர்
திட்டமிடலாம்.
மனிதர்களின் வேறுபாடு
அம்பானியும் உழைக்கிறார்.
நம்முடைய தெரு அண்ணாச்சியும் உழைக்கிறார். ஆனால் இருவரின் வெற்றி சதவீதம் வேறுபடுகிறது
அல்லவா? இது எப்படி என்பதை விளக்குகிற பகுதி இது.
தகவல்களை பகுத்தறிவது
ஊரடங்கு காலம். பிரதமர்
தடாலடியாக மெழுகுவர்த்தி ஏற்றச்சொல்லிவிட்டார். அதற்காக எந்த தெரு வழியாக போனால் போலீசில்
மாட்டாமல் கடைக்குப் போவது என யோசிப்பது இந்த வகையில் வரும். இதற்காக அந்தப்பகுதியிலுள்ள
தெரு, சாலைகளை மனதில் அலசுகிறோம் அல்லவா? இந்த புத்திசாலித்தனத்தை இப்பிரிவில் குறிக்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக