உணர்ச்சிகள் எப்படி உருவாகின்றன? - மூளை உடலுக்கு கொடுக்கும் சிக்னல்!



உணர்ச்சிகளின் உருவாக்கம்

மனிதர்கள் என்பவர்களை விலங்குகளிலிருந்து பிரித்துப் பார்க்க உதவுவது பகுத்தறிவு சிந்தனைதான். அதேசமயம், அவர்களின் உறுப்புகளக்கும், மூளைக்குமான தொடர்பு சரியாக இருப்பதை அவர்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள்தான் உலகிற்கு சொல்லுகின்றன. ஒருவர் உங்களைப் பார்த்து கே.பு (கேனப்புண்ணாக்கு) என திட்டினால், உடனே உங்களுக்கு கோபம் வரும். வராவிட்டால் உங்களுக்கு காது சரியாக கேட்காது என்று அர்த்தம். இதுபோல வார்த்தைகளைப் புரிந்துகொண்டு நாம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது உயிர்வாழ்வதற்கு அவசியம். ஒருவர் எச்சரிக்கையாக இப்படி உங்களை திட்டியிருந்து அவரோடு காந்தியின் காட்டிய சகோதரத்துவத்தை நாம் பாவித்தால், நிச்சயம் நம் வாழ்க்கைக்கு அவர் உலை வைப்பார். பிற்பாடு உயிருக்கும்.

இயல்பாக ஒருவர் சொல்லும் சொல்லை அவரின் உடல்மொழி, முகபாவை வைத்தே உணர்ந்துகொள்ள முடியும். அப்படி சொல்லும் வார்த்தைக்கும் உடல்மொழிக்கும் தொடர்பில்லாதபோது அது மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் கூட புரியாது.

மூளையிலுள்ள அமிக்தலா எனும் பகுதி, உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு அதற்கான உடல்மொழியை உருவாக்குகிறது. இதற்கான சமிக்ஞைகளை மூளைக்கு அனுப்புகிறது. காதல், சோகம், கல்யாணம், நட்பு, பிரிவு என அனைத்திற்கான விஷயங்களை பகுப்பாய்வு செய்வது இந்தப்பகுதிதான்.

மனிதர்களின் ஆளுமை உருவாவது ஆசை, உணர்ச்சிகள் மற்றும் அறிவு எனும் மூன்று அம்சங்களால்தான் என்கிறார் கிரேக்க த்ததுவவியலாளர் பிளேட்டோ.

ஒருவர் தொடர்ந்து எரிச்சல் ஏற்படுத்தினால் நமக்கு கோபம் வருகிறது. அந்த கோபமே காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோடா என அண்ணாமலை ரஜினி போல சவால்விட்டு சண்டையில் குதிக்க வைக்கிறது. போராடத்தூண்டுகிறது.

நல்ல தாட்டியான பௌன்சர் போன்றவர் உங்களை மிரட்டினால் பயம் வரும். பயம் வந்தால் அந்த பயத்தை போக்க என்னவழி என மூளை யோசித்து,உங்களை போராடச் சொல்லும். அவர் உங்களை பிக் பாயாக இருந்தால் சமயோசிதமாக ஒதுங்கி சமாதானம் செய்துகொண்டு காம்ரமைசாக வாழச்சொல்வது நம் அறிவுதான்.

அன்புகொண்ட நட்பை, காதலை இழந்தால் மனம் தீவிரமான சோகத்தில் உருகும். அவரோடு கழித்த நாட்களை, பிற விஷயங்களை எண்ணிப்பார்க்கும். இந்த சூழலில் புதிய விஷயங்களை மனம் ஏற்காது.

அழுகிப்போன பொருட்கள் கிடக்கும் இடத்தில் நிற்கிறீர்கள். அதை விட மோசமான ஆட்களுடன் பேசிக்கொண்டிருந்தால் இயல்பாகவே உங்கள் உடல் அங்கிருந்து வெளியேறச்சொல்லி சமிக்ஞை தந்துகொண்டே இருக்கும்.

சடாரென சாலையைக் கடக்கும்போது ரெட்மியில் மாட்லாடியபடியே ஒரு பெண் உங்கள் மீது மோதிவிடுகிறார். அது அம்சமான பெண் என்றால் அட என்றும், ஆன்ட்டி அடச்சே என என்றும் மூளை பதில் கொடுக்கும். இதில் நமக்கு என்ன லாபம் என்பதைப் பொறுத்து உணர்ச்சிகள் மாறுபடும்.

மூளையில் அனைத்து உணர்ச்சிகரமான விஷயங்களும் தாலமஸ் பகுதிக்கு வரும். அங்கிருந்து விழிப்புணர்வு நிலையில் சென்சரி கார்டெக்ஸ, ஹிப்போகாம்பஸ் பகுதிக்கு சென்று தகவல்கள் ஆராயப்பட்டு பின்னர் நினைவுகளாக பதியப்படுகின்றன. இதில் முகத்தில் உணர்ச்சிகள் வெளிப்படுத்துவது அந்த இடத்தைப் பொறுத்து மாறுபடும்.

ஒருவர் உங்களை கொன்றுவிடுவேன் என்று சொல்லி ஆயுத்ததுடன் நெருங்கும்போது என்ன செய்வார் ஆழ்ந்து யோசிக்க முடியாது. அப்போது அதனை வேகமாக பகுப்பாய்வு செய்து சண்டைக்கு ரெடி சொல்ல அமிக்தலா பகுதியும், ஹிப்போதாலமசும் உதவுகிறது. முகத்தின் உணர்ச்சிகளைப் பொறுத்தவரை தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் வெறி முகத்தில் இருக்கும். உயிர்தப்பிக்கும் அவசரத்தில் குளோசப் புன்னகை முகத்தில் பூத்திருக்குமா என்ன?

 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்