இப்போதைக்கு எங்களது ஊழியர்களது பாதுகாப்பே முக்கியம்!
இந்தியாவில் அனைத்து தொழில்களும் ஊரடங்கால் முடங்கியுள்ளன. இப்போதும் வெற்றிகரமாக இயங்கும் தொழில்கள் என்றால் உணவு சேவை நிறுவனங்களைக் குறிப்பிடலாம். ஸ்விக்கி, ஸோமாடோ, ஊபர் ஈட்ஸ் ஆகிய நிறுவனங்களை குறிப்பிட்ட நேரங்களில் செயல்படலாம் என அரசு கூறி அனுமதித்துள்ளது. இவர்கள் குறிப்பிட கால இடைவெளியில் செயல்படலாம். இதுபற்றி குரோஃபர்ஸ் நிறுவன இயக்குநர் அல்பிந்தர் திண்ட்ஸாவிடம் பேசினோம்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நீங்கள் எப்படி உங்கள் வணிகத்தை பாதுகாக்க முயன்று வருகிறீர்கள்.
வைரஸ் பாதிப்பு பிப்ரவரி மாதம் அதிகரிக்க தொடங்கியபோது, அடுத்து நாங்கள் என்ன செய்யவேண்டுமென்று பல்வேறு அதிகாரிகளை கூட்டி பேசி சில முடிவுகளை எடுத்தோம். இப்போது அதன்படி செயல்பட்டு வருகிறோம்.
மக்களின் தேவை அதிகரித்து வருகிறது. இதற்காக உங்கள் நிறுவனம் என்ன திட்டங்களை வைத்திருக்கிறது?
நாங்கள் பல்வேறு விற்பனைத் திட்டங்களை உருவாக்கி வைத்திருந்தோம். ஆனால் மத்திய அரசின் ஒருநாள் ஊரடங்கு அதற்குப் பிறகு வந்த 21 நாள் ஊரடங்கு சட்டம் எங்களது திட்டங்களை பயனில்லாமல் செய்துவிட்டது. நாங்கள் எங்கள் நிறுவனத்தைத் தேடிவரும் வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து பல்வேறு விஷயங்களை செயல்படுத்த நினைத்திருந்தோம்.
உங்கள் முதல் மூன்று முன்னுரிமை திட்டங்களை கூறுங்கள்.
நாங்கள் முதலில் எங்கள் ஊழியர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டி இருந்தது. அடுத்து பொருட்களை வைத்திருந்த கிடங்குகளை பாதுகாக்க வேண்டியிருந்தது. குறைந்த ஊழியர்கள்தான் பணிக்கு வந்தனர். அவர்களை வைத்து அவசியமான பொருட்களை மக்களுக்கு வழங்குவது பெரிய சவாலாக இருந்தது. இவற்றை சரியான முறையில் வழங்குவது பற்றித்தான் நாங்கள் யோசித்து வந்தோம்.
நிறுவனத்தின் இயக்குநராக இந்த ஊரடங்கு உத்தரவை எப்படி பார்க்கிறீர்கள்?
இந்த நிலைமை எங்களுக்கு மட்டுமல்ல, எங்களைப்போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கும் கடினமான சூழ்நிலைதான். அதனை எப்படியோ நாங்கள் சமாளித்து வருகிறோம். நாங்கள் எங்கள் சப்ளை டீம் உறுப்பினர்களை கவனமாக பராமரித்து பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தி வருகிறோம். இந்த சூழலில் எங்களது வாடிக்கையாளர் குறிப்பிட்ட ஆர்டரை வேண்டா ம் என்றால் உடனடியாக அதனை கிடங்கிலிருந்து எடுத்துவரும் பணியையும் நாங்கள் தடை சொல்ல வேண்டியிருக்கும். அதைத்தான் முக்கியமான பணியாக நினைத்தோம்.
அடுத்த ஓராண்டை எப்படி திட்டமிட்டிருக்கிறீர்கள்?
அடுத்த ஆண்டுக்கெல்லாம் இப்போது எங்களிடம் எந்த திட்டமுமில்லை. இப்போது எங்கள் ஊழியர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறேன. மேலும் எங்களது விநியோகத்தை குறைத்துக்கொள்ள நினைக்கிறோம். இப்போதைக்கு எங்களுக்கு கிடைக்கும் லாபம் இந்த ஆண்டுக்கு போதுமானதாக இருக்கிறது.
நன்றி - எகனாமிக் டைம்ஸ் - ஷமிதா சர்மா
கருத்துகள்
கருத்துரையிடுக