வாரிக் கொடுத்த வள்ளல்கள் - இந்திய தொழிலதிபர்கள் கொடுத்த நிதி விவரங்கள்!
எவ்வளவு கொடுத்தார்கள்?
வைரஸ், புயல், சுனாமி என பல்வேறு இயற்கைப் பேரிடர் பாதிப்பு ஏற்படும்போதெல்லாம் பல்வேறு நடிகர்கள், தொழிலதிபர்கள் தமது அறக்கட்டளை மூலம் நிதியை அரசுக்கு அளிப்பார்கள். அப்படி கொரோனா பாதிப்பிற்கு நிதியளித்த தொழிலதிபர்களைப் பார்ப்போம்.
டாடா அறக்கட்டளையும், டாடா குழுமமும் ஒன்றாக இணைந்து அனைத்து தொழிலதிபர்களை விடவும் அதிகமாக 1500 கோடி ரூபாயை கொரோனா பாதிப்பிற்காக நிதியாக வழங்கியுள்ளனர்.
முகேஷ் அம்பானி பிரதமர் நிவாரண நிதிக்கு 500 கோடி வழங்கியுள்ளார். மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் மாநில அரசுகளுக்கு தலா 5 கோடி என 510 கோடி ரூபாயை நிதியாக வழங்கியுள்ளார்.
முக்கியமான நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனமான ஐடிசி, 150 கோடி ரூபாயை நிதியாக இந்திய அரசுக்கு வழங்கியுள்ளது.
வேதாந்தா நிறுவனத்தின் தலைவரான அனில் அகர்வால், கொரோனா பாதிப்பிற்காக 100 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் எவரையும் பணியிலிருந்து நீக்கவில்லை. மேலும் அவர்களுக்கு முழு சம்பளத்தை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
மகிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மகிந்திரா, தனது தொழிற்சாலையில் வெண்டிலேட்டர்களை இலவசமாக தயாரித்து அரசுக்கு வழங்க உள்ளார். நோய் பாதிப்பு தீரும் வரை தனது ரிசார்டுகளை நோயாளிகளை தங்கவைத்துக்கொள்ள அரசு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறி பரந்த மனதை காட்டியுள்ளார். இவர் மும்பை, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் இசை விழாக்களை நடத்தி வருகிறார் என்பது பலரும் அறியாத செய்தி.
அதானி நிறுவனத்தின் கௌதம் அதானி, அரசின் நிதி முயற்சிக்கு நூறு கோடி ரூபாய் அளித்துள்ளார். மேலும் பல்வேறு செயல்பாடுகளை செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தைச் சேர்ந்த சாஜன் ஜிண்டால், பிரதமரின் நிதித்திட்டத்திற்கு நூறு கோடி ரூபாய் வழங்கியுள்ளார். தங்களது தொழிற்சாலை உள்ள சுற்றுவட்டப்பகுதியினருக்கு உணவு வழங்கி வருகிறார். வெண்டிலேட்டர்களை தயாரித்தும் இறக்கமதி செய்தும் வழங்கி வருகிறார்.
அசீம் பிரேம்ஜி மற்றும் விப்ரோ நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து 1,125 கோடி ரூபாயை வழங்கியுள்ளன. இதன் மூலம் மருத்துவ சாதனங்கள் வாங்கி விநியோகிக்கப்பட உள்ளன.
அரசு பொதுத்துறை நிறுவனங்கள் ஆயிரம் கோடி ரூபாயை பிரதமரின் நிதித்திட்டத்திற்கு வழங்கியுள்ளன.
பேடிஎம் நிறுவனம் அரசுக்கு 500 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக