கொரோனா பாதிப்பிற்கு மத்திய அரசின் காலதாமதமே காரணம்! - பிரிதிவிராஜ் சௌகான்



கொரோனா வேகமாக பரவியதற்கு மத்திய அரசின் மெத்தனம்தான் காரணம்

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பிரிதிவிராஜ் சவான்


மகாராஷ்டிராவில்தான் முதலில் கோவிட் -19 பாதிப்பு தென்பட்டது. ஆனால் அதனை தொடக்கத்திலேயே கவனித்திருத்திருந்தால் அதனை தடுத்திருக்கலாம் என்கிறார்களே ? உண்மையா?


நீங்கள் கூறுவது தவறு. மகாராஷ்டிரா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறமுடியாது. உலக சுகாதார நிறுவனம் மார்ச் 11ஆம் தேதிதான் கொரோனா பாதிப்பை உலக அளவில் ஆபத்தான நோய் என்று அடையாளப்படுத்தியது. உடனே மகாராஷ்டிரா அரசு 48 மணிநேரத்தில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தது. நகரங்களை இணைக்கும் சாலைகளை மூடிய அரசு, மார்ச் 14ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளையும், வணிக மால்களையும் மூடிவிட்டது. பதினெட்டாம் தேதி அனைத்து அலுவலங்களிலுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க உத்தரவிட்டோம். 21ஆம் தேதி முழுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து விட்டோம். மும்பை வணிகத்தலைநகரமாகம். இதனால் மெட்ரோ ரயில், துறைமுகம், வங்கிகள் ஆகியவற்றை மூடுவதற்கு பல்வேறு அமைச்சகங்களிடம் பேசினோம்.அ வர்களின் அனுமதி கிடைக்க சற்று தாமதம் ஆகிவிட்டது. 

உள்ளூர் விமானங்கள் தோராயமாக 800, சர்வதேச விமானங்கள் 18 ஆயிரம் என மும்பைக்கு வருகின்றன. இவர்களை முன்னரே சோதித்து தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கவில்லை. விமான சேவையை சரியானபடி முன்னரே முடக்கவில்லை. நாங்கள் மக்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று அரசு அறிவுரைப்படி தங்களை தனிமைப்படுத்திக்கொள்வார்கள் என்று நம்பியது தவறாகப் போய்விட்டது. இதன் விளைவாக இன்று மும்பையில் டில்லிக்கு அடுத்த அதிக கோவிட் -19 நோயாளிகள் உள்ளனர். இதற்கு மத்திய அரசின் அலட்சியம்தான் காரணம். அவர்கள் முன்னரே செயல்பட்டிருந்தால் நோய் அபாயத்தை தடுத்திருக்கலாம். 

மகாராஷ்டிராவில் அனுபவமில்லாத கட்சி ஆட்சியில் இருக்கிறது. நீங்கள் என்னவிதமான அறிவுறுத்தல்களை தற்போதைய முதல்வருக்கு வழங்கினீர்கள். 

இம்மாநிலத்தில் மூன்று கட்சிகள் சேர்ந்து ஆட்சியை அமைத்துள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு இதுபோன்ற சூழ்நிலைகளை மத்தியிலும் மாநிலத்திலும் சமாளித்த அனுபவம் உண்டு. ஆனால் நாங்கள் தேசிய கட்சி என்றாலும் மகாராஷ்டிராவில் நாங்கள் குறைவான எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்டுள்ளோம். அரசின் முடிவுகளில் நாங்கள் மூன்று கட்சிகளும் சேர்ந்துதான் முடிவு செய்கிறோம். நாங்கள் மூன்று விஷ்யங்களை அரசுக்கு சொன்னோம். முதலில் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், அவசர உதவி, படுக்கைகள் இரண்டாவது, ஊரடங்கு உத்தரவால் வேலை இழப்புக்கு உள்ளான வறுமை நிலையிலுள்ள தொழிலாளர்களுக்கு பண உதவிகள், உணவு வழங்குவது, அடுத்து ஊரடங்கு உத்தரவால் சமூகத்தில் ஏற்படும் பல்வேறு ஆபத்தான விளைவுகளை நாம் சமாளிப்பது பற்றி சொன்னோம். 

ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரவிருக்கிறது. முடங்கிய தொழில் முதலீடு, வணிகத்தை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?


மாநிலத்திலுள்ள தினக்கூலி முதல் தொழிலதிபர்கள் வரை பல்வேறு தரப்பினருக்கும் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கான இழப்பீட்டை சரிசெய்ய  மத்திய அரசு ல1.7 ட்ரில்லியன் டாலர்களை அனுமதித்துள்ளது. இது ஒப்பீட்டளவில் இந்த மொத்த உற்பத்தியில் ஒரு சதவீதமாகும். இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இதைவிட அதிகளவு நிதியை ஒதுக்கி செயல்பட்டு வருகின்றனர். தற்போது எங்கள் முன் உள்ள கேள்வி எங்கள் மாநிலத்திற்கு வழங்கப்படும் நிதியை மக்களுக்கு எப்படி செல்வு செய்வது என்பதுதான். 

வரலாற்றிலேயே முதல்முறையாக மகாராஷ்டிரா அரசு மக்களுக்கு ஏராளமான மானிய உதவிகளை வழங்கியுள்ளது. உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளதே?

ஆம். பொருளாதாரம் சரியான நிலைக்கு திரும்ப வேண்டுமே? விரைவில் சிறு அங்காடிகள், சுய தொழில்முனைவோர் ஆகியோருக்கு கடைகளை இயக்க அனுமதி வழங்கப் போகிறோம். 

நன்றி - எகனாமிக் டைம்ஸ் 










கருத்துகள்

பிரபலமான இடுகைகள்