பிந்து சாரரைக் கொல்ல முயலும் மாபெரும சதி - மௌரிய சிங்கம் அசோகா



மௌரிய சிங்கம் அசோகா


அசோக் கே பேங்கர்


தமிழில்: டாக்டர் சியாமா பிரசாத்


வெஸ்லேண்ட்


மௌரிய பேரரசர் அசோகர் பற்றிய நாவல். மொத்தம் 232 பக்கங்கள்தான். மௌரிய பேரரசை அரசர் பிந்துசாரர் ஆண்டுகொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு லிச்சாவி கூட்டமைப்பு அச்சுறுத்தலாக உள்ளது. கூடவே செல்யூகஸ் நிகேடாரின் படைகளும் அவரது அரசை அழிக்க திட்டம் தீட்டுகிறது. இதற்கு அவரது மகளான பிந்துசாரரின் வளர்ப்புத் தாய் அபாமா உடந்தையாக இருக்கிறார்.


லிச்சாவி கூட்டமைப்பின் சதியை முழுமையாக தெரிந்துகொள்ளாத அசோகர், அதனை அப்படியே வெளிப்படுத்துகிறார். இதன் விளைவாக அரச குடும்பத்தில் சதியை உருவாக்கி கொரோசானி ராணி உஷாராகிறார். அவர்களுக்கு அரசரைக் கொன்று நாட்டில் கலக நிலையை உருவாக்கி ஆட்சியை பிடிப்பதே நோக்கம். இதற்கு தடையாக இருப்பது 850 பேர்களுக்கு மேல்கொண்ட சண்டிகைகள் எனும் பெண்கள் படை. இவர்களை எப்படி அகற்றுகிறார்கள், இதிலுள்ள துரோகி யார், அசோகர் எப்படி அரியணை ஏறும் எண்ணம் இல்லாமல் இருப்பவர் இதில் எதிரிகளின் சதி வலையில் சிக்குகிறார், பிந்துசார ருக்கும் அசோகருக்குமான உறவு, கௌடில்யரை எப்படி அவரது எதிரிகள் ஒதுக்கி காட்டில் வாழ வைக்கின்றனர் என்பதை மிகச்சிறப்பாக எழுதியுள்ளார் ஆசிரியர்.


ஏறத்தாழ இந்நாவல் அசோகரின் முழு வாழ்க்கையையும் சொல்லவில்லை. இது அசோகர் எப்படி லிச்சாவி கூட்டமைப்பு பிந்து சாரரை கொல்ல முயல்கிறது, அதில் தோற்றாலும் சண்டிகைகளை சாதுரியமாக அகற்றுகிறது, இரண்டாவது இளவரசரான அசோகர் எப்படி இதில் சிக்குகிறார் என்பதை மட்டுமே விவரிக்கிறது. இதன் வழியாக பாடலிபுத்திரம், தட்சசீலம், கலிங்கம் ஆகிய நாடுகளின் நிலைமையும் விவரிக்கப்படுகிறது.


அரச நீதிக்கான விஷயங்களை கௌடில்யர் சாதுரியமாக அசோகருக்கு கற்பிக்கிறார். அவர் ஏற்கெனவே மௌரிய பேரரசை ஆளும் தன்மை அசோகருக்கு மட்டுமே உண்டு என கணித்தாலும் அதை அவரிடம் கூறுவதில்லை. பிரச்னைக்கான தீர்வுகளை மட்டும் கூறி எப்படி நடந்துகொள்ளவேண்டுமென கூறி அனுப்பி வைக்கிறார். அவர் கூறியபடியே ஆட்சி முழுக்க கொரசானிகளின் பிடியில் சிக்குகிறது.



இறுதியில் அசோகர் தன்னைக்கொல்லும் சதியிலிருந்து தப்பி இளவரசரும் தனது அண்ணனுமான சுயநலவாதி சுஷிமையும் வேண்டாவெறுப்பாக காப்பாற்றுகிறார். இந்த முயற்சியில் பெண் சிங்கம் ஒன்றைக் கொல்கிறார். அதன் குட்டி ஒன்றையும் காப்பாற்றி தட்சசீலத்திற்கு

அரசு உத்தரவுப்படி கிளம்புகிறார். அவரைப் பார்த்தபடி கொரசானி தளபதி நிற்கிறார். அவர் அசோகரை எப்படி ஒழித்துக்கட்டுவது என யோசிப்பதோடு நாவல் நிறைவடைகிறது.


குறிப்பிட்ட ஒரு சம்பவத்தை மட்டும் எடுத்துக்கொண்டபடியால் பேங்கரால் விரிவாக அனைத்து விஷயங்களையும் சொல்ல முடியவில்லை. கௌடில்யர் அபாமாவின் விஷ முயற்சியை தடுப்பது பற்றி குறிப்பிடலாம். இதனால் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவரும்போது அசோகரின் கதை முழுமையாக வாய்ப்புள்ளது. கதையில் இன்னும் நிறைய விஷயங்களைச் சொல்ல இடமுள்ளது. சுவாரசியமான கதையாக வளரவும் நிறைய வழிகள் உள்ளன.


கோமாளிமேடை டீம்




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்