பைபோலார் டிஸ்ஆர்டர் - நானே நானா யாரோ தானா?





பைபோலார் டிஸ்ஆர்டர்

மூன்று படத்தில் தனுசுக்கு ஏற்படும் அதே பிரச்னைதான். வேலையில் உறவுகளில் ஏற்படும் பாதிப்பு, இந்த மனநிலை கோளாறுக்கு தூண்டில் போடுகிறது. மரபணு ரீதியாக ஏற்படும் வாய்ப்பு உண்டு.

ஒருவரின் மனநிலை மாறிக்கொண்டே இருக்கும். அவரின் செயல்பாடும் ஆற்றலும் நினைத்துப் பார்க்கமுடியாதபடி மாறும். இதில் மூன்று வகை உண்டு.

பைபோலார் 1 என்பது ஒருவாரத்திற்கு ஏற்படும் மன அழுத்த நிலைமை. இந்த நிலைமை நேருபவர்கள் மருத்துவமனையில் சேர்வது அவசியம். பைபோலார் 2, மனநிலை அடிக்கடி மாறும் தன்மை தீவிரமாக இருக்காது. சைக்ளோதெமியா என்பது மனநிலை மாறும் வேகம் அதிகமாக இருக்கும். இரண்டு ஆண்டுகளில் இதன் தன்மை மாறும். அடுத்து வகைப்படுத்தப்படாத பைபோலார் பிரிவில் மேற்சொன்ன மூன்று குறைபாடுகளும் மாறிமாறி ஏற்படும்.

தினசரி வாழ்க்கையை அமைதியாக வாழ்ந்து வருகிறார். அனைவரிடமும் பேசுகிறார். நிகழ்ச்சிகளுக்கு செல்கிறார். குட்மார்னிங் சொல்லி ஆபீஸ் வேலையைத் தொடங்குபவர், குட்நைட் சொல்லிவிட்டு வீட்டுக்குச்செல்கிறார்.

அடுத்து மன அழுத்த நிலையில் இவர் ஏராளமான பொறுப்புகளை ஏற்பார். அத்தனையையும் படாதபாடுபட்டு முடித்து நல்லபெயர் வாங்குவார். மன அழுத்த நிலையின் தொடக்கம். இது சிலவாரங்களுக்கு நீடிக்கும். இதை ஹைப்போமேனியா என்பார்கள்.

வேலைகளை எப்போதும் போல செய்தாலும் முகத்தில் மகிழ்ச்சியின் காலடிச்சுவடு கூட இருக்காது. தற்கொலை எண்ணங்கள் உருவாகும். குறைவாகவே தூங்குவார்கள். விரக்தியின் சாயல் முகத்தில் படியத்தொடங்கும்.

மெல்லிய மன அழுத்தம்

தினசரி நடவடிக்கையில் மாற்றம் வரும். அதில் இவர்களுக்கு ஆர்வம் இருக்காது. மிகவும் சோர்வாகவும், சலிப்பாகவும் பணியாற்றுவார்கள்.

மேனியா

தூக்கம் குறைவாக இருக்கும். தன்னைத்தானே புகழ்ந்து பேசுவார்கள். வேலைகளை வெறி வந்தது போல செய்வார்கள். அதிக சாகச சவால்களை ஏற்பார்கள்.

கலப்பு பிரச்னைகள்

வேகமாக வேலைகளைச் செய்வது சோர்வான முகம், உடல், மனம் என அறிகுறிகள் தென்பட்டால் ஆறு மீட்டர் தள்ளி உட்கார்ந்து இருப்பது நல்லது. உங்களுடைய உண்மையான நண்பராக இருந்து அவருக்கு இந்த அறிகுறிகள் தென்பட்டால் அவரை உளவியல் மருத்துவரிடம் அழைத்துச்செல்வது நல்லது. அவர் மனநிலையை சமநிலைக்கு கொண்டு வரும் மாத்திரைகளை உங்களுக்கு பரிந்துரைப்பார். அடுத்து உணவு, தூக்கம் ஆகியவற்றுக்கான திட்டம் அவசியம். அப்படி இருந்தால்தான் இப்பிரச்னையிலிருந்து ஒருவர் வெளியே வரமுடியும். அன்றைய நிகழ்வுகளை டைரியில் எழுதி வைப்பது அவசியம்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்