ஏ.பி.சி,டி மறந்துபோகும் ஞாபகமறதி காதலி - படிபடி லேச்சே மனசு


படி படி லேச்சே மனசு


காதலிக்கு நேரும் ஞாபக மறதி நோயை மீறி காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதுதான் கதை. இந்தப்படத்தை லோக்கல் விஷயங்கள் சேர்ந்து ரசிக்கலாம். ஒரிஜினலைப் பார்க்க மொமண்ட் டு ரிமம்மர் என்ற கொரிய படத்தைப் பார்த்துவிடுவது உத்தமம்.


சர்வானந்த், வேலை வெட்டி இல்லாமல் சுற்றுபவர். ஏறத்தாழ உள்ளூர் ரவுடி. அவருக்கும் மருத்துவ கல்லூரி மாணவி சாய்பல்லவிக்கும் ஏற்படும் முட்டல், மோதல், காதலாகி வெடிக்கிறது. காதல் அத்தியாயங்களில் இருவருமே இறுக்கம் நெருக்கம் காட்டி பிரமிக்க வைக்கிறார்கள். ஆனால் உணர்ச்சிகர காட்சிகள்தான் இழுவையாகி ஆமென் சொல்ல வைக்கிறது.,


சர்வானந்தின் பெற்றோர் வாழ்க்கையில் நடக்கும் விஷயத்தில் காதலே போதும் கல்யாணம் வேண்டாம் என நினைக்கிறார். இது போதாதா காதலர்களுக்குள் பிரச்னை வர? லிவ் இன் உறவுகளையும் இயக்குநர் இங்கு பேசவில்லை.. சாய்பல்லவி இடதுசாரி நாடக குழுவைச் சேர்ந்தவர் போல காட்டுகிறார்கள். ஆனால் பேசுவது, பழகுவது பொறுத்து எந்த மாற்றங்களும் இல்லை.


நேபாளத்திற்கு சாய்பல்லவி முகாமிற்காக போகிறார். அப்போது அங்கு நடக்கும் பூகம்பத்தில் அவருக்கு அடிபடுகிறது. அதன்விளைவாக ஏற்படும் ஞாபக மறதியால் அவருக்கு ஏ ஃபார் ஆப்பிள் என்பது கூட மறந்துபோகிறது. இதனால் காதலனை தவிர்க்க நினைக்கிறார். தோழியிடமும் இந்த பிரச்னையை மறைத்து தனக்கு பொய்யாக இந்த வியாதி இருக்கிறது என்று சொல்லிவிடு என காதலனை பார்க்க மறுக்கிறார். இந்த காலகட்டத்தில் சாய்பல்லவியின் கருத்தை ஏற்கும் மனநிலையில் சர்வானந்த் இருக்கிறார். ஆனால் நிலைமை தலைகீழாக மாறுகிறது.


இறுதியில் அவர் சாய்பல்லவியின் உண்மையான நிலையை உணர்ந்தாரா, காதலை ஏற்றாரா என்பதுதான் கதை. படத்தில் காதல், காதலை மனத்தில் புகுத்தும் விஷால் ச்ந்திரசேகரின் இசை நன்றாக இருக்கிறது. ஆனால் இரண்டாம் பாக காதல் காட்சிகள் சோர்வைத் தருகின்றன. நெருக்கமான உறவின் அர்த்தமே விஷயங்களை பகிர்ந்துகொள்வதுதானே. ஆனால் அதை சாய்பல்லவி மறுப்பது ஏன்? என்று புரியவில்லை. அவர் காதலனிடம் மட்டும் அல்ல குடும்பத்திடமும் தனக்கு நேர்ந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளவில்லை. படத்தை பாதாளத்தை கொண்டு செல்வது இதுதான்.


வெண்ணிலா கிஷோர், பிரியதர்ஷி, சுனில் காமெடி காட்சிகள் நன்றாக உள்ளன. எல்லோருமே தங்களுக்கான பாத்திரங்களில் நன்றாக நடித்திருக்கிறார்கள். முரளி சரமா, சம்பத், சர்வானந்த், அஜய் எல்லோருமே பொருத்தமாக இருக்கிறார்கள்.


காதல் நினைவில் கரையும் மனம்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்