மருந்துகளை இந்தியா முழுக்க அனுப்ப தபால்துறை உதவுகிறது!

ரவிசங்கர் பிரசாத், மத்திய அமைச்சர்.

சமூக வலைத்தளங்களில் கோவிட் -19 பாதிப்பை பற்றி ஏராளமான வதந்திகள் உலவி வருகின்றன. அரசிடம் இதைத் தடுக்க ஏதாவது திட்டமிருக்கிறதா?

பிரதமர் பல்வேறு மாநில அரசுகள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நோயை கட்டுப்படுத்துவதற்காக பேசி வருகிறார். சீசனுக்கு அரசியல் செய்யும் காங்கிரஸ் போன்ற கட்சிகள்தான் இந்த விவகாரத்தை அரசியல் ஆக்குகின்றன. வதந்திகளைப் பரப்புகின்றன. நாட்டிலுள்ள 130 கோடி இந்தியர்கள் பிரதமரின் பக்கம் உள்ளனர். அரசியல் கட்சித்தலைவர்கள், மத தலைவர்கள் காவல்துறை அதிகாரிகள் என பலரிடமும் பேசி நிலைமையை பற்றிய தகவல்களைப் பெற்று வருகிறோம். நாட்டின் சுமூகமாக சூழ்நிலை நிலவ பாடுபட்டு வருகிறோம். 

மத்திய அரசின் கோரிக்கைகளை ஊதாசீனம் செய்து  தப்லிஜி மாநாடு நடைபெற்றது பொறுப்பற்ற செயல். உள்துறை அமைச்சர் இதில் பங்கேற்றவர்களின் சுற்றுலா விசாக்களை தடை செய்து அவர்கள் சிகிச்சை பெற வசதிகளை செய்துள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து பணிபுரிந்து வருகின்றன. சமூக வலைத்தளங்களில் அரசின் முயற்சிகளை கிண்டல் செய்து வெளியிடப்படும் பதிவுகளை நீக்க உத்தரவிட்டிருக்கிறோம். நாங்கள் இப்போது உள்ள உணர்ச்சிகரமான சூழ்நிலையை சமூக வலைத்தளங்கள் புரிந்துகொள்ள வேண்டுகிறோம். மக்களின் பேச்சுரிமையை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அதற்கான அரசின் செயல்பாடுகளை விமர்சித்தால் நாங்கள் அப்பதிவுகளை நீக்கிவிடுவதோடு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கையும் எடுப்போம். 

ஊரடங்கு காலத்தில் பலரும் வீட்டிலிருந்தபடியே வேலை செய்கிறார்கள். இதற்கான இணைய இணைப்பு தடையின்றி கிடைக்க என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறீர்கள்?

பிஎஸ்என்எல் மூலம் சிம் வேலிலிட்டியை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளோம். இணைய இணைப்பின் ஏற்பட்டுள்ள நெருக்கடியை 20 -30 சதவீதம் நீக்க அரசு முடிவெடுத்து  செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் வீட்டிலேயே பணி செய்வது புதிதான ஒன்று. அதில் பாதிப்பு வராதபடி செயல்பாடுகளை முடுக்கியுள்ளோம். ஸ்மார்ட்போன்கள் மூலம் இணைய வீடியோக்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 20சதவீதம் அதிகரித்துள்ளது. தபால்துறை மூலம் சிம்களுக்கு ரீசார்ஜ் செய்யவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

மாநிலங்களுக்கு இடையேயும்மாவட்டங்களுக்கு இடையேயும் வாகனப்போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டது. தபால்துறைதான் இந்த நேரத்தில் உதவி வருகிறதா?

தபால்துறைக்கு இந்தியா முழுவதும்  நெட்வொர்க் உள்ளது. தேவையான மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு  பொருட்களை கார்கோ பார்சல் மூலம் நாடெங்கிலும விமானம் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளோம். ஊரடங்கு காலத்தில் தபால்துறையின் பங்களிப்பு பல்லாயிரம் மக்களை காப்பாற்றி வருகிறது. 

ஊரடங்கு காலத்தில் இ வணிக நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன. இ- முறை பண பரிமாற்றமும் அதிகரித்துள்ளது. 

இ வணிக நிறுவனங்கள் இன்னும் கிராமங்களுக்கு செல்லவில்லை. தபால்துறை மூலம் நீங்கள் சிறு நகரங்கள், ஊரகப்பகுதிகளுக்கு கூட பொருட்களை அனுப்பி வைக்க முடியும். இந்த வகையில் அரசு தபால்துறை பெரிதும் நம்பியுள்ளது. டிஜிட்டல் இந்தியா என மத்திய அரசு கூறிய வாக்குறுதிகள் இன்று நிஜமாகி மக்களுக்கு உதவியுள்ளன. 

தொற்றுநோய் தொடர்பான சட்டத்தில் ஏதேனும் மாற்றங்களை செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்களா?

இதுபோன்ற தொற்று நோய்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றுபவை. நீங்கள் கூறுவது போலான மாற்றங்களை எதிர்காலத்தில் நாம் செய்யவேண்டியிருக்கலாம். ஆனால் இப்போது உள்ள சட்டங்களே போதுமானவை. 

நன்றி - இந்துஸ்தான் டைம்ஸ் - ஸ்மிருதி காக் ராமச்சந்திரன் 










கருத்துகள்

பிரபலமான இடுகைகள்