ஏழுமுறை மின்னலால் தாக்கப்பட்ட அமெரிக்கர்! - மின்னல் செய்திகள்
cc |
புயலைத் தடுக்க வாய்ப்புள்ளதா?
இயற்கையின் எந்த நிகழ்வுகளையும்
மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் இன்றுவரை முயன்று வருகிறார்கள். பஞ்சம்
தலைதூக்கியுள்ள பகுதிகளில் மழை வர வைக்க முயல்கிறார்களே,.. அது இந்த ரகத்தில் சேரும்.
இம்முறையில் கார்பன் டை ஆக்சைடு, சில்வர் அயோடைடு, கால்சியம் குளோரைடு ஆகியவற்றை மேகத்தின்
மீது தூவி மழையை பொழியச்செய்கின்றனர். சிலசமயங்களில் இம்முயற்சி பெரு மழையைத் தடுக்ககவும்
பயன்படுகிறது.
உலகில் மின்னல் தாக்குதல் அதிகம் எங்கு நடந்துள்ளது?
ஆப்பிரிக்க நாடான காங்கோவில்
உள்ள கிஃபுகா என்ற ஊரில் மட்டும் ஆண்டுக்கு 150 மின்னல் தாக்குதல்கள் நடைபெறுகின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த ராய் சுலிவன் ஏழுமுறை மின்னலால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்துள்ளார்.
இவர் வாழும் வர்ஜீனியா மாநிலம் அதிகளவு மின்னல்தாக்குதல்களை பெற்றுள்ளது. சுலிவன் பெரும்பாலும்
மலையோரங்களில் தனது வேலைகளைச் செய்துவருவதால் மின்னல் தாக்குதல்களுக்கு இலக்காகி உள்ளார்.
புயலை முன்னமே அறிய முடியுமா?
கடினம்தான். ஆனால் செயற்கைக்கோள்
வரைபடங்கள் மூலம் ஓரளவு கணித்து யூகிக்கலாம். மின்னல் உருவாகும்போது, காற்று 30 ஆயிரம்
டிகிரி செல்சியசிற்கு சூடாகும். அப்போது உருவாகும் இடிச்சத்தம் 120 டெசிபலில் ஒலிக்கும்.
இதை வைத்து புயல் வந்துகொண்டிருப்பதாக கருதலாம். மற்றபடி மின்னல் வேகமாக கண்ணுக்கு
தெரிந்தாலும், அது ஏற்படுத்தும் இடிச்சத்தம் தாமதமாகவே கேட்கும். இதற்கான விளக்கத்தை
நான் தரவேண்டியதில்லை. உங்களுக்கு தெரியும் அல்லவா?
போனில் உள்ள ஸ்டாப் வாட்ச்சை
இயக்கிக்கொள்ளுங்கள். மின்னல் கண்ணில் பட்டவுடன் ஆன் செய்யுங்கள். ஐந்து செகண்டுகள்தான்.
இடிச்சத்தம் கேட்டால் நிறுத்திவிடுங்கள். புயல் வருவதாக இருந்தால் ஐந்து செகண்டுகளுக்கு
1.6 கி..மீ. தூரத்தை அநாயசமாக கடக்கும். இதனால் இப்படி கணக்கு போட்டு பார்த்தாலே புயலை
கண்டுபிடித்துவிடலாம். தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ளலாம்.
ஒருவரை மின்னல் தாக்குவதற்கான
வாய்ப்பு பத்தாயிரத்தில் ஒருவருக்கு என்ற அளவில் உள்ளது.
மின்னலால் ஏற்படும் வெப்பத்தின்
அளவு, 27, 760 டிகிரி செல்சியஸ்.
இதுவரை உலகில் வீசியதிலேயே
சக்திவாய்ந்த புயல் காற்று 1996 இல் வீசியது. இதன் பெயர் ஒலிவியா.
புயல் எப்படி உருவாகிறது?
ஈகுவடார் நாட்டருகே உள்ள
கடல் பகுதியில் புயல் உருவாகிறது. இங்கு ஏற்படும் வெப்பமான, ஈரப்பதம் மிகுந்த காற்றில்
ஏற்படும் வேறுபாடுகள் புயலாக மாறுகிறது. மணிக்கு 119 கி.மீ. வேகத்தில் புயல் உருவாகத்
தொடங்கினால், மக்கள் தயாராக இருக்கவேண்டும் என்று பொருள். கடலில் வேகமாக இருக்கும்
புயல், நிலப்பரப்பு வந்தவுடன் கடலின் வெப்பமான காற்று இல்லாததால் பலவீனமடைகிறது. இதற்குப்பிறகு
நிலப்பரப்பில் பாயும் புயல் தீவிரமான காற்றையும் மழையையும் கொடுக்கிறது. இதன் காரணமாக
வெள்ளமும், வீடுகள் சிதைவடைவதும் நடக்கிறது.
மின்னலின் நிறம் என்ன?
மின்னலின் நிறம் பொதுவாக
காணப்படுவது வெள்ளை நிறமாகத்தான். ஆனால், இந்த நிறம் என்பது சூழ்நிலையைப் பொறுத்து
மாறுபடும். அதிக மழை பெய்து சூழலில் ஓசோன் இருந்தால், மின்னல் நீலநிறமாக தெரியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக