இந்திய தேர்தல் 2019: கறுப்பு பணத்தை ஒழிப்பது எப்படி?
இநியூஸ்ரூம்/கறுப்பு பணம் |
தேர்தலில் கறுப்பு பணம்!
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வரும்போதும், இடைத்தேர்தலின் போதும் கறுப்பு பணம் பயன்படுத்தப்படுகிறது என்ற புகாரை நாளிதழ்களில் பார்த்திருப்பீர்கள். இந்த விவகாரத்தில் தொழில்நிறுவனங்கள், வெளிநாட்டு அமைப்புகளின் பங்கு உள்ளது என தேர்தல் ஆணையம் கூறிவருகிறது. ஆனாலும் இதன் மீது அரசு பெரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி இவ்வகையில் கட்சிகளுக்கு நிதியளிப்பதற்கு அறக்கட்டளை போன்ற நிறுவனங்கள் தேவை என்று கூறின. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி, தேர்தல் பத்திரங்களையே வெளியிட்டு கல்லா கட்டிவிட்டது. இதில் முதலீடு செய்பவர்கள் யார் என்ற விவரங்கள் வெளிப்படையாக பேசப்படாமல் உள்ளது இதனை தீவிரமான பிரச்னையாக்குகிறது..
இன்று கட்சிகள் பெறும் 70 சதவீத பணம் யார் கொடுக்கிறார்கள் என்று தெரியாமல் வந்து சேருகிற பணம். ஆனால் இந்த பணம் எங்கிருந்து வருகிறது என சட்டத்திற்கு தெரியாவிட்டாலும், மக்களுக்கு ஏறத்தாழ தெரிந்துவிட்டது போலத்தான். ஆனால் அரசு வெளிப்படையாக ஊழலை ஒழிப்போம் என்று கூறினாலும் அதில் இன்னும் தெளிவு ஏற்படவில்லை. அதற்கு என்ன காரணம் என பிரதமர் மோடிதான் கூறவேண்டும்.
கறுப்பு பணத்தை தடுப்பதற்கான இன்னொரு வழி, தேர்தல் கமிஷன் கூறியுள்ளபடி வேட்பாளருக்கான செலவை அரசே ஏற்பது. இதன்மூலம் கறுப்பு பணத்தை தடுக்க முடியும்தான். ஆனால் இதனை எப்படி செய்வது என்பது குறித்து அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை.
- 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டது. 8 ஆயிரம் கோடிதான் என்கிறது டில்லியைச் சேர்ந்த சென்டர் ஃபார் மீடியா ஸ்டடிஸ் அமைப்பு.
- 27 ஆயிரம் கோடி எப்படி, யார் கொடுத்தது என்றே தெரியாமல் செலவிடப்பட்டுள்ளளது.
- நடப்பு தேர்தலில் 69 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பணம் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அனைத்து கட்சிகளும் செலவு செய்யும் என எதிர்பார்க்கப்படும் பணம்.
பணம், பரிசு, பயணம், பொருட்கள் என தேர்தலுக்காக வேட்பாளர்களுக்கு அளிக்கப்படும் பணம் செலவிடப்படுகிறது.
தேர்தலுக்கான நிதி அமைப்பு ஒன்றை ஏற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இதனால் சுயேச்சையாக தேர்தலில் நிற்பவர்கள் கூட அரசின் நிதியுதவி பெற முடியும்.
நன்றி: டெக்கன் கிரானிக்கல் - டி.தனுராஜ்.