இறுகும் சீனாவின் கண்காணிப்பு- அப்டேட் ரிப்போர்ட்!
கண்காணிப்பு
அரசு!
சீனாவிலுள்ள
ஸெங்சூ, கிய்ங்டாவோ, வூஹூ ஆகிய நகரங்களில் உள்ள குற்றவாளிகளை போலீஸ கண்டுபிடித்து கைது செய்தது.
சிம்பிள் ஏஐ தொழில்நுட்பம் மூலம்தான். தேசியளவில்
மக்களை கண்காணித்து கட்டுப்படுத்த ஏஐ கண்காணிப்பு திட்டத்தை நாடு முழுவதும்
அமைத்து வருகிறது சீன கம்யூனிஸ்ட் அரசு. தற்போது 1.4 பில்லியன் மக்களை அரசு ஏஐ மூலம் கண்காணித்து பின்தொடர்ந்து வருகிறது.
குற்றவாளிகளை
பிடிக்க முக்கிய நகரங்களிலுள்ள ரயில்வே நிலையங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டும்
கடன்களை கட்டாதவர்களின் பெயரும் பெரும் எல்இடி திரைகளில் வெளியிடப்பட்டுவருகிறது. வீடுகளின் நுழைவாயில்களிலும் முகத்தைக்
கண்டுபிடுக்கும் அல்காரித கருவிகள் பொருத்தபட்டு அமெரிக்காவைக் காட்டிலும் 200
மில்லியன் கேமராக்களோடு சீனா கண்காணிப்பு தேசமாக மாறிவருகிறது.
உய்கூர்
முஸ்லீம் சிறுபான்மையினரை தீவிரமாக கண்காணிக்கும் சீன அரசு அவர்களின் உறவுகளை
அத்தனையும் கண்காணித்து வருகிறது. "சமூகத்தையும் சமூகத்தையும் சீன அரசு அல்காரிதம் வழியில்
கட்டுப்படுத்துகிறது" என்கிறார் பீட்டர்சன் உலகளாவிய
பொருளாதார மையத்தைச் சேர்ந்த மார்ட்டின் சோர்ஸெம்மா. சாலையில்
சிவப்பு விளக்கு எரியும்போது சீறிக்கொண்டு பறந்தால் உடனே கன்ட்ரோல் ரூமில்
விதிமீறியவரின் போட்டோ, அரசு ஐடி எண்கள் அனைத்தும்
வந்துவிடும். அப்புறம் எங்கே தப்பிப்பது.? மக்களை இப்படி இரவு பகலுமாக கண்காணித்தாலும் நல்ல சம்பளம், வீடு, வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை அளிப்பதில் சீன அரசு
பின்தங்கியுள்ளது.
2020
ஆம் ஆண்டில் 300 மில்லியன் கேமராக்களை
நாட்டில் பொருத்தும் முனைப்பிலுள்ள அரசு, கண்காணிப்பை
பலப்படுத்த 30 பில்லியன் டாலர்களை செலவழிக்கவிருக்கிறது.
"வரிகட்டும் மக்களின் பணத்தை வைத்தே அவர்களை கண்காணிக்க அரசு
தீர்மானித்திருக்கிறது. சீன அரசின் சீர்திருத்தங்கள்
தோல்விஅடைந்திருந்தாலும் அதனை தைரியமாக சொல்ல யாருமில்லை" என்கிறார் வரலாற்றுஆய்வாளர் ஸாங் லிஃபன். சீன
அரசிடன் தற்போதுள்ள அசுர கண்காணிப்பு பலத்தின் மூலம் ஒருவரின் தினசரிவாழ்வை
பதிவுசெய்து அவர்களை பின்தொடரமுடியும். போலீசாருக்கும்
ஸ்மார்ட் கிளாஸ் கொடுக்கப்பட்டுள்ளதால் குற்றவாளிகளை அறுபத்து மூவர் விழாவிலும்
கூட எளிதாக கண்டுபிடிக்க முடியும்.
கண்காணிப்பு
தொழில்தான் சீனாவில் தற்போது சக்கைபோடு போட்டு வருகிறது. சென்ஸ்டைம்(620 மில்லியன்),
யிடு(200 மில்லியன்), மெக்வி(460
மில்லியன்) ஆகிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு
முதலீடுகள் குவிந்து வருகின்றன. கண்காணிப்பு வணிகத்தின் கடந்தாண்டு
மதிப்பு 80 பில்லியன் டாலர்கள்.