பிளாக்குகளை ஒடுக்கும் தான்சானியா அரசு!


Image result for tanzania bloggers tax




வலைத்தளங்களுக்கு ஒடுக்குமுறைவரி!

Image result for tanzania bloggers tax


தான்சானியா அரசு விரைவில் சமூக வலைதளம் மற்றும் தனிநபர் வலைத்தளங்களுக்கு வரி விதிக்கவிருக்கிறது. ஜூன் 15 தேதி முதல் வலைத்தள நிறுவனர்கள் ஆண்டுக்கு 900 டாலர்களை கட்டினால் இணையத்தில் உயிர்வாழ முடியும். இதில் யூட்யூப் சேனல்கள், பிளாக்குகள், சமூகவலைதளங்களும் உள்ளடங்கும். விதியை மீறுபவர்களுக்கு 5 மில்லியன் அபராதமும், ஒராண்டு தண்டனையும் உண்டு.

சுதந்திர ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கும் தொலைத்தொடர்பு ஆணையம்(TCRA) இச்சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கையும் நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டது. தற்போது இத்தடையை எதிர்த்து இணையத்தில் கடுமையான விமர்சனங்களை தான்சானியர்கள் எழுதி வருகின்றனர். "மூன்றில் ஒருபகுதியினர் வறுமையில் தவிக்கும் நாட்டில் லைசென்ஸ் வாங்கி இணையத்தில் எழுதுவது எப்படி சாத்தியம்? அரசு தனக்கு எதிரான ஊடகங்களை டிஜிட்டல் அகதிகளாக மாற்றியுள்ளது" என்கிறது ஜாமி ஃபாரம் என்ற செய்தி வலைதள நிறுவனர் மெக்சன்ஸ் மெலோ. 2015 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜான் பி மகுஃபுலி எதிர்க்கட்சி மற்றும் தனக்கு எதிரான சக்திகளை பல்வேறு சட்டங்கள் மூலம் ஒடுக்கிவருகிறார். கென்யா, உகாண்டாவிலும் இதுபோலவே சர்வாதிகாரம் பரவத்தொடங்கியுள்ளது.

பிரபலமான இடுகைகள்