தேர்தல் நிதி பற்றிய அலசல்! - 2019


Image result for election funding
இந்தியன் எக்ஸ்பிரஸ்




தேர்தல் செலவு


2014 ஆம் ஆண்டு மக்களவைக்கு அரசியல் கட்சிகள் செலவிட்ட தொகை ரூ. 35 ஆயிரம் கோடி . 2019 ஆம் ஆண்டு இத்தொகை ரூ.60 ஆயிரம் கோடியாக எகிறும் என கணக்கிடப்பட்டு உள்ளது.

தற்போது மக்களவை தேர்தலில் செலவிடப்படவுள்ள 10 ஆயிரம் கோடி என்பது 2013 ஆம் ஆண்டு கர்நாடக அரசின் மாநில சட்டசபை தேர்தலுக்கு செலவான தொகையை விட இரு மடங்கு அதிகம்.

2012-2016 காலகட்டத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகளின் நதிமூலம் தேடிப்பார்த்தால் கார்ப்பரேட் நிறுவனங்கள் 89 சதவிகித நன்கொடைகளை அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.

2016-17 ஆம் ஆண்டில் ஆறு தேசிய கட்சிகள் பெற்ற 46% நன்கொடை, பெயர் குறிப்பிட விரும்பாத நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டவை.


நிதி கிடைப்பது எப்படி?

தன்னார்வ நிதி ஆதாரங்களே அதிகம். அது தவிர்த்து மக்களிடம் திரட்டும் நிதி, கூப்பன்களை விற்பது, கட்சி நூல்கள், உறுப்பினர் அட்டை, கார்ப்பரேட் நன்கொடைகள் நிதியை அம்பாரமாய் சேர்க்க உதவுகின்றன.


 கட்சிகள் ரூ.2 ஆயிரத்திற்கு மேலான நன்கொடைகளை ரொக்கமாக பெறமுடியாது. இதற்கு மேல் நிதியளிப்பவர்களை பற்றிய விவரங்களை கட்சிகள் பெறவேண்டும் என்பது கட்டாயம். இவ்விதியை கட்சிகள் எளிதாக உடைத்து ரூ.2 ஆயிரம் என நிதிக்கணக்கு எழுதி நிறைய போலிப்பெயர்களை சேர்ப்பது தற்போதைய நடைமுறை.


உள்ளூர் பிசினஸ ்புலிகள், கான்ட்ராக்டர்கள் கட்சிக்கு நிதி தராமல் வேட்பாளரின் பெயருக்கு நிதியளித்து அவரை வளைப்பதோடு அரசின் விதிகளுக்கும் பெப்பே காட்டி விடுகின்றனர்.


தேர்தல் வரும்போது கட்சிகளுக்கு அறக்கட்டளை மூலம், தேர்தல் பத்திரங்கள் மூலமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏராளமான ரூபாய்களை  வழங்குகின்றன.  நிதி கொடுப்பவரும் யாருக்கு கொடுத்தோம் என கூறவேண்டியதில்லை. கட்சிகள் வழக்கம்போல கிடைத்த கும்மென்ற அமௌண்டை பற்றி மூச்சுவிடாமல் ஜம்மென்ற லாபத்தில் திளைக்கின்றன.

செலவு என்ன?

தேர்தல் பேரணி, கட்சி அலுவலகங்கள், பயணம், தங்குமிடம் என கட்சிகள் செலவழிக்க ஏராளமான உபாயங்கள் உண்டு. ஊடகங்களுக்கு கட்சி விளம்பரங்கள், தொழிலாளர்களுக்கு குவார்டர், கோழி பிரியாணி என செலவுகள் தூள் பறக்கும்.

தேர்தல் பேரணி, பிரசாரத்தின்போது கரன்சி, தங்கம், சாராயம், ஸ்மார்ட்போன், டிவி, ஃபிரிட்ஜ், தையல் மெஷின், வீட்டு உபயோகப் பொருட்கள், அண்டா, குண்டா முதல் இருபதுரூபாய் டோக்கன் வரையிலும் செலவழிக்கின்றன அரசியல் கட்சிகள்.

தேர்தலின்போது மட்டும் ஃபார்முக்கு வரும் தேர்தல் ஆணையத்தின் கண்களில் மண்ணைத் தூவ, பல்வேறு கூப்பன்களை கையில் கொடுத்து அதை கட்சி பிரதிநிதிகளிடம் கொடுத்து பணம் பெறும் இன்னோவேட்டிவ் ஃபார்முலாக்களை கட்சிகள் பின்பற்றுகின்றன. இதனை அமுலாக்குவதில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எப்போதும் டாப் என்பது உலகமே அறிந்தது.

டிஜிட்டல் பெப்பே!

ரூ.2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கண்காணிப்பு என்பதையெல்லாம் அரசியல்வாதிகள் எப்போதே கடந்துவிட்டனர். இப்போது கட்சிகள் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்தும் நன்கொடைகளை பெறுவதை பாஜக அரசு எளிதாக்கியுள்ளது. இந்திய தேர்தலை இதன் மூலம் வெளிநாட்டினர் எளிதாக தீர்மானிக்கலாம்.

போலி நிறுவனங்களின் மூலம் கட்சிகளுக்கு பணம் தருவது அதிகரித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை அளிப்பது ஆளும் பாஜகவுக்கு ஆதரவான கொள்கையாக மாறியுள்ளது.

நன்றி: கௌசிக் தேகா, இந்தியா டுடே





பிரபலமான இடுகைகள்