கட்டற்ற அறிவு - கட்டற்ற மென்பொருளின் பிரயோஜனம்!
2
கட்டற்ற அறிவுக்கான லோகோவை வடிவமைக்க
நண்பரை அணுகியபோது, கட்டற்ற மென்பொருள் குறித்து விளக்கினேன். உடனே அவர் கேட்டது, சர்வருக்கு
பயன்படுத்துவார்களே அதுதானே! பொதுவாக சர்வருக்கு லினக்ஸ் ஓஎஸ்களை பயன்படுத்துகிறார்கள்
என்றாலும் லினக்ஸ்மின்ட், ஃபெடோரா லினக்ஸ் போன்ற ஓஎஸ்களை தனிப்பட்ட உபயோகத்திற்கும்
நீங்கள் பயன்படுத்தலாம். இதில் சிக்கல், நீங்கள் பயன்படுத்தும் கோப்புகளை விண்டோசில்
பயன்படுத்த அதற்கென சில மாற்றங்களை செய்யவேண்டும் அவ்வளவுதான்.
விண்டோஸ் அல்லது மேக் உள்ளிட்ட
ஓஎஸ்களிலில்லாத தனிச்சிறப்பு ஜிஎன்யு லினக்ஸில் என்ன இருக்கிறது?
கட்டுப்பாடு: லினக்ஸிலுள்ள புரோகிராம்களை நீங்கள் டெக் வல்லுநராக
இருந்தால் மாற்றியமைத்து பயன்படுத்தலாம். இல்லையென்றாலும் காப்பிரைட் மென்பொருள் போல
அப்டேட்ஸ் கேட்டு செய்யும் பணியைக் கெடுக்காது. செயல்பாடுகளில நிறுவனத்தில் வரைமுறையற்ற
கட்டுப்பாடு இருக்காது.
பயிற்சி: ஆதார புரோகிராம்களை எழுதி பழகும் மாணவர்கள், அதிலுள்ள
தவறுகளை எளிதில் திருத்தி எழுதிப்பழக வாய்ப்பு கிடைக்கிறது. கற்கும் ஆர்வத்துடன் இருப்பவர்களுக்கு
லினக்ஸ் கடல்போன்றது.
பாதுகாப்பு: ஆதார புரோகிராம்களை அனுமதியின்றி பலரும் மாற்றி
திருத்தி வலுப்படுத்துவதால் நச்சு புரோகிராம்களின் தாக்குதல்கள் பிற ஓஎஸ்களை விட ஜிஎன்யு
லினக்ஸில் குறைவு.
நிலையானது: சில ஓஎஸ்களை குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நிறுவனத்தினர்
கைவிட்டுவிடுவார்கள். லினக்ஸில் அப்படி ஒரு பிரச்னை கிடையாது. எனவே நீண்டகால திட்டங்களுக்கு
லினக்ஸை பலரும் தேர்ந்தெடுத்து பயன்படுத்துகின்றனர்.
கட்டற்றமென்பொருள்(ஓபன் சோர்ஸ்) என்பதன் அர்த்தம், சுதந்திரம்.
அதனை விலையின்றி இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யமுடியும் என்பதல்ல.
கட்டற்ற மென்பொருட்களை வாங்கும்போது ஆதார
புரோகிராம் வரிகள் பொது உரிமையில் உடன் வழங்கப்படும். கட்டற்ற மென்பொருள் என்பதும்
திறமூல மென்பொருளும் வேறுபடும் இடம் இதுவே. கட்டற்ற மென்பொருளான லினக்ஸை கணினியில்
நிறுவுவதற்கு, பிரச்னைகளை சரிசெய்வதற்கு கட்டணங்களை நிபுணர்கள் வசூலிக்கிறார்கள். சில
கட்டற்ற மென்பொருட்கள் இலவசமாக பயனர்களுக்கு வழங்கப்படுவதும் உண்மையே.
கட்டற்ற மென்பொருள் உதயம்!
அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்த ஆர்எம்எஸ் என அழைக்கப்படும்
ரிச்சர்ட் ஸ்டால்மன், கட்டற்ற மென்பொருளின் தந்தை. யூனிக்ஸ் ஓஎஸ்ஸூக்கு மாற்றாக உருவாக்கிய
ஜிஎன்யு, ஃப்ரீ சாஃப்ட்வேர் பவுண்டேஷன்(1985), காப்பிலெஃப்ட் செயல்பாடு இவரது முக்கிய
உருவாக்கம். ஹார்வர்ட் மற்றும் எம்ஐடியில் செயல்பட்ட ரிச்சர்ட் ஸ்டால்மன், தற்போது
ஃப்ரீ சாஃப்ட்வேர் பவுண்டேஷனின் தலைவராக உள்ளார்.
(சேகரிப்போம்)