உலகம் சுற்றும் பத்திரிகையாளர்!
உலகம் சுற்றும் பத்திரிகையாளர்!
பதினேழு நாடுகள், பதினெட்டாயிரம்
கி.மீ தொலைவு கடந்திருக்கிறார் பத்திரிகையாளர் பால் சலோபெக்.
ஆப்பிரிக்காவிலிருந்து தென் அமெரிக்காவுக்கு நடந்து சென்றதை விளக்கும்
நேஷனல் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான முயற்சி இது. "கார்கள், விமானங்கள் மூலம் செய்தி சேகரிப்பது ஒருவகை என்றால் நடைபயணத்தின் மூலம் மனிதர்களை
சந்தித்து அவர்களின் வாழ்வை அறிவது புதிதாக உள்ளது" என்கிறார்
இருமுறை புலிட்ஸர் விருது வென்ற பத்திரிகையாளர் பால் சால்பெக்.
பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் வழியே நடந்துசென்றுகொண்டிருக்கிறார். டீ குடித்துவிட்டு நடக்கும் பால், தாபாவில் உணவருந்திவிட்டு
தினசரி நாற்பது கி.மீ நடக்கிறார். இரவில்
ஏதேனும் சாலையோரமுள்ள குடும்பங்களோடு தங்கி இளைப்பாறி பயணிக்கிறார். "இந்தியா- பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் செழுமையாக வளர்ந்துள்ள
கோதுமைகளைப் பார்க்கிறேன். எனக்கு எந்தவேறுபாடுகளும் தெரியவில்லை.
சீக்கியர், பாகிஸ்தானியர் இருவரையும் சந்தித்து
பேசியுள்ளேன். இணையத்தில் இதுபோல கட்டுரைகளை தயாரிக்கலாம்.
ஆனால் அவை அனுபவத்திற்கு நிகராகாது." சிரியா,
இரான் நாடுகளில் அனுமதி மறுக்கப்பட்டாலும் தன் நடைபயணத்தை தொடர்ந்துவருகிறார்
பால் சலோபெக். இப்பயணம் 2024 ஆம் ஆண்டு
நிறைவுபெறவிருக்கிறது.