நவீன தலைமுறையின் போராட்டக்குரல் - அலிசியா கார்ஸா!



aliciagarza
out.com





மாற்றுப்பாலின சாதனையாளர்கள்!

அலிசியா கார்ஸா


கலிஃபோர்னியாவின் ஓக்லாந்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர். தி கார்டியன் பத்திரிகையில் கட்டுரைகளை எழுதியுள்ளார். தி நேஷன் பத்திரிகையில் செயற்பட்டவர், பெண்களுக்கான பல்வேறு அமைப்புகளில் செயல்பட்டுள்ளார். பிளாக் லிவ்ஸ் மேட்டர் எனும் அமைப்பின் துணை நிறுவனர் அலிசியா.

சாண்டியாகோவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலையில் படித்தார். அப்போதே, பெண்களுக்கான உரிமைகள், கருத்தடுப்பு விஷயங்களைப் பற்றிப் பேசினார். பிளாக் லிவ்ஸ் மேட்டர் எனும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமைகள் பேசும் அமைப்பின் ஸ்லோகன் போன்றவற்றை இவரே உருவாக்கினார். தனது பாலின விருப்பத்தை வெளிப்படையாக அறிவித்தவர், சக பெண் துணையான திருநங்கையுடன் வாழ்ந்து வருகிறார்.

சான்பிரான்சிஸ்கோ கடற்புர பகுதியில் பல்வேறு மனித உரிமைச் சம்பவங்களை செய்தவர், இவர். இதற்காக சில விருதுகளையும் வென்றிருக்கிறார். ட்ரேவோன் மார்ட்டின் என்ற இளைஞர், ஜார்ஜ் ஸிம்மர்மேன் என்பவரால் அநீதியாக சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்காக நீதிவேண்டி போராடியதில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு. மேலும் மாணவர் உரிமை, இயற்கை வளங்களை அழிப்பதற்கு எதிராக, சமூகத்திற்கான வசதிகள் என இவர் நவீன தலைமுறையினருக்கான போராட்ட வெறியை ஊட்டுபவர் அலிசியா. போலீசாரின் வன்முறை, சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வு, மாற்றுப்பாலினத்தவரின் உரிமை என போராட்ட வேட்கையை இடையறாது ஊட்டும் முக்கிய ஆளுமை. 2013 ஆம் ஆண்டு முதலாக வெகுஜன மக்களுக்கு அறிமுகமான ஆளுமையாக போராட்டங்கள், பேரணிகளில் பங்கேற்று வருகிறார். புறக்கணிக்கப்படும் மக்களின் குரலாக பேசுகிறார், உரையாற்றுகிறார், மக்களின் சக்தியை அரசியல்வாதிகளுக்கு புரிய வைக்க முயற்சித்து வருகிறார்.

நன்றி: அவுட். காம்

தமிழில்: வின்சென்ட் காபோ