நான் அதிர்ஷ்டசாலி!- குசலா ராஜேந்திரன்(தேசியவிருது விஞ்ஞானி)










"அமெரிக்காவில் புகழ்பெற்ற திறமையான புவியியலாளர்களிடம் பயிற்சிபெற்று இந்தியா திரும்பியதும் என்னால் ஆய்வுகளை சரியாக செய்யமுடியுமா என்று பயமிருந்தது. ஆனால் கற்றலுக்கும் அறிவுக்கும் அமெரிக்கர்கள் தேர்வை விட முக்கியமளித்தனர்" என புன்சிரிப்புடன் பேசும் குசலா ராஜேந்திரன் கடந்த மாதம் இந்திய அரசின் தேசிய விருதை பெற்ற முதல் பெண் ஆராய்ச்சியாளர்.


1970 ஆம் ஆண்டு ஐஐடி ரூர்க்கியில் புவி இயற்பியல் படிக்க சேர்ந்தபோது அவரது வகுப்பில் இருந்த அனைத்து மாணவர்களும் ஆண்கள். இவர் மட்டுமே பெண். பின்னர் மேற்படிப்புகளுக்கும் இதே நிலைமை நீடிக்க, சக, மூத்த மாணவர்களின் அறிவுரைகள் உதவி கிடைக்காமல் தடுமாறியுள்ளார் குசலா. "இந்திய பெண்கள் தங்கள் லட்சியத்தில் பத்து சதவிகிதம் கூட நிறைவேறாத நிலையில் என் குடும்பத்தின் ஆதரவினால் நான் நினைத்த விஷயங்களை சாதித்துள்ளனே. கொஞ்சம் அதிர்ஷ்டம் என் வாழ்வில் இருந்தது என நினைக்கிறேன்" என அதிர சிரித்தபடி பேசுகிறார் குசலா.  1987 ஆம் ஆண்டு தெற்கு கரோலினாவில் முனைவர் படிப்பை முடித்து வந்தவுடன் திருமணம் முடிவாகி புவியியலாளரான சி.பி.ராஜேந்திரனை மணந்தார். 1993 ஆண்டு இந்தியா திரும்பியவர் 2003 ஆம்ஆண்டு வரை  புவி ஆய்வு அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றினார்.  பின்னர் இந்திய அறிவியல் கழகத்தில் துணை பேராசிரியராக இன்றுவரை பணியாற்றி வருகிறார்.

இளமை குறையாத புவியியல்!

பனிப்போர் காலகட்டத்தில் பிற நாடுகள் அணுகுண்டுகளை தயாரிக்கின்றனவா என்ற சந்தேகத்தில் பல நாடுகளும் பூமி தட்டுகளை கண்காணிக்கும் அமைப்பை உருவாக்கினர். 1960 ஆம் ஆண்டு இதுகுறித்த திட்டவட்டமான அமைப்பை அதற்குள் உருவாக்கியிருந்தனர். "1979 ஆம் ஆண்டு ஆசிரியர்களிடம் கேள்வி கேட்டு பதிலைப் பெறுவதற்குள் வியர்த்து பதற்றம் ஆகி ஒருவழி ஆகிவிடுவேன்" என்கிறார் குசலா.

இந்திய அரசின் பெண் விஞ்ஞானி விருது, நிலநடுக்கம் குறித்து இவர் செய்த ஆய்வுகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் புவி தட்டுகளிடையே ஏற்படுவதை ஏன் முன்கூட்டியே கணித்து கூறமுடியாதது என்பதுதான்.  "சில கி.மீ இடைவெளியில் கூட நிலநடுக்கம் ஏற்படலாம. அதனை கணிக்க முடியாததற்கு  இந்த தன்மை முக்கிய காரணம்" என்கிறார் குசலா. கேரளாவின் லத்தூர் இயற்கை பேரிடர் உட்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து கணவர் ராஜேந்திரனுடன் பல்வேறு ஆராய்ச்சி அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.

தகவல் தேவை!

ஏனெனில் இந்தியாவின் நிலநடுக்க வரலாறு நானூறு ஆண்டுகளுக்கும் குறைவு. இதனால் எச்சரிக்கையின்றி ஏற்படும் நிலநடுக்கங்களின் அழிவை நம்மால் கணிக்க முடியாமல் போகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நேபாளத்தில் ஏற்பட்ட 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தில்  மூவாயிரத்திற்கு மேற்பட்டோர் பலியாயினர். இதனை முன்கூட்டியே கணித்து எச்சரிப்பதற்கு நமக்கு நிறைய தரவுகள் தேவை.

2004 ஆம் ஆண்டு சுனாமி நிகழ்வுகளிருந்து குசலா, ராஜேந்திரன் ஆய்வுப்பயணம் தொடங்கியது.