வேட்டையில் முந்தும் பூமா!

 















வேட்டையில் முந்தும் பூமா!

பூமா, ஜாக்குவாருக்கு இணையாக ஒப்பிடப்படும் உடல் அமைப்பைக் கொண்ட விலங்கு. இரவில் துடிப்பாக வேட்டையாடும். காடு தொடங்கி பாலைவனம் வரை தன்னை தகவமைத்துக் கொண்டு  வாழும் இயல்புடைய விலங்கு. பூமாவை குறிப்பிட ஆங்கில மொழியில் மட்டும் நாற்பது பெயர்கள் உண்டு. 

அறிவியல் பெயர்: பூமா கான்கலர் (Puma concolor)

குடும்பம்:  ஃபெலிடே (Felidae)

வேறுபெயர்கள்:  கூகர் (Cougar), பாந்தர் (Panther), காடாமௌன்ட்(Catamount)

தாயகம்: அமெரிக்கா

அடையாளம் 

மார்பும், வயிறும் வெள்ளை நிறத்தில் இருக்கும். மீதியுள்ள இடங்களில் பழுப்பு நிற முடி இருக்கும். வாலின் முனையில் கறுப்பு நிறம் உண்டு. வட்டவடிவில் வயிறு, சிறிய தலையைக் கொண்டது. 

சிறப்பம்சம்

சிறுத்தை போல முதுகெலும்பு நீளமாக இருப்பதால், வேட்டையாடும் வேகம் மணிக்கு 80 கி.மீ. மேற்புறமாக பாறைகளின் மீது 5.4 மீட்டரும்,  கீழ்ப்புறமாக 12  மீட்டர் தூரமும் தாவும் திறன் கொண்டது. இரையின் பின்னாலிருந்து கழுத்தை குறிவைத்து தாக்கி வீழ்த்தும். 

நீளம்  ஆண் (2.4 மீ.), பெண் (2.05 மீ.)

எடை  ஆண் (52 முதல் 100 கி.கி வரை), பெண் (29 முதல் 64 கி.கி வரை)

வேகம் - மணிக்கு 64 - 80 கி.மீ.

வாழிடம் மலை, காடு, பாலைவனம், சதுப்புநிலம்

முக்கிய உணவு 

கடமான், அணில், பூச்சிகள்

இனப்பெருக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 முதல் 6 குட்டிகளை ஈனுகிறது 

ஆயுட்காலம்  8-10 ஆண்டுகள் (வனப்பரப்பில்)

எழுப்பும் ஒலி

கர்ஜனை எழுப்பாது. பூனை போல உறுமல், சீறல் ஒலிகள் தான்

தகவல்தொடர்பு

பெரோமோன் (pheromones)

கலப்பின வகை

பூமாவும், சிறுத்தையும் இணைசேர்ந்தால் பிறக்கும் கலப்பின விலங்குக்கு, பூமாபார்ட் (Pumapard) என்று பெயர். பெற்றோரின் உடலில் பாதி அளவில் தான் இருக்கும். பூமாவின் உடலமைப்பையும் குட்டையான கால்களையும் பெற்றிருக்கும். 

அச்சுறுத்தல்

வாழிடம் அழிவது, உணவு தட்டுப்பாடு, சட்டவிரோத வேட்டை

வேட்டைக்குத் தடை

அர்ஜென்டினா, பிரேஸில், பொலிவியா, குவாத்திமாலா, பனாமா, ஹோண்டுராஸ், நிகரகுவா, பராகுவே, சிலி, வெனிசுலா, உருகுவே

ஐயுசிஎன் பட்டியல் (IUCN redlist)

அழியும் அச்சுறுத்தல்நிலையில் இல்லாதவை (Least concern LC)

---------------------------------------------------------------------------------

உருவ வேற்றுமை

சைபீரிய புலி, ஆசிய சிங்கம், பூமா, பாப் கேட்

சைபீரிய புலி (Siberian Tiger)

பூனை இனத்திலேயே பெரியது

நீளம் - 4 மீட்டர்

எடை 300 கி.கி

ஆசிய சிங்கம் (Asiatic Lion) 

ஆப்பிரிக்க சிங்கங்களை விட சற்றே சிறியது குஜராத்தின் கிர் தேசியப்பூங்கா மற்றும் சரணாலயத்தில் வாழ்கின்றன. 

நீளம் - 3 மீட்டர் 

எடை 190 கி.கி

பூமா (Puma)

நீளம் 2.4 மீட்டர்

எடை 100 கி.கி

குறுவால் பூனை (Bobcat)

காட்டுப்பூனை வகைகளில் ஒன்று. இதன் பின்னங்கால்கள் நீளமானவை.

நீளம் 1 மீட்டர்

எடை 13 கி.கி.

தாவும் திறன் 

பள்ளிப் பேருந்து  -  11 மீட்டர் 

பூமாவின் தாவும் திறன் - 12 மீட்டர்

ஜாக்குவார், பூமா  ஒற்றுமை வேற்றுமை 

ஜாக்குவார் 

அதிகபட்ச வேகம் - 80 கி.மீ. (மணிக்கு)....

உயரம் , எடை

70 செ.மீ., 75 கி.கி.

ஆயுள்

12 ஆண்டுகள்

பூமா 

அதிகபட்ச வேகம் 45 கி.மீ. (மணிக்கு)

உயரம் , எடை 

75 செ.மீ., 86 கி.கி.

ஆயுள் 

19 ஆண்டுகள் 

வேட்டையாடும் வேகத்தில் ஜாக்குவார் தான்  வெற்றி பெறுகிறது. 

கடிக்கும் வேகம் 

மனிதர்கள்  120 - 160 பிஎஸ்ஐ (Pounds per Square Inch)

ஜாக்குவார்  1,500 பிஎஸ்ஐ

பூமா  400 பிஎஸ்ஐ

பிஎஸ்ஐ (PSI) என்பது அழுத்தத்தை அளவிட பயன்படும் அளவுகோல். இந்த அளவீடு மூலம் காற்று, திரவத்தின்  அழுத்தத்தை அளவிடலாம். 





https://purelyfacts.com/question/12/61/96/which-is-faster-a-jaguar-or-a-puma

https://www.wwfindia.org/about_wwf/priority_species/threatened_species/asiatic_lion/

https://www.britannica.com/animal/Siberian-tiger

https://www.sciencefocus.com/nature/top-10-which-animals-have-the-strongest-bite/

https://www.quora.com/Who-would-win-in-a-fight-a-cougar-or-a-jaguar

https://lacgeo.com/pampas-lowland-plains-south-america#:~:text=The%20Pampas%20(Las%20Pampas)%20is,of%20Rio%20Grande%20do%20Sul.

https://www.britannica.com/place/the-Pampas

https://www.nwf.org/Educational-Resources/Wildlife-Guide/Mammals/Mountain-Lion

https://www.thoughtco.com/mountain-lion-facts-4684104

https://wildlifeday.org/content/factsheets/puma

https://felidaefund.org/learn/cats/mountain-lion

https://www.iucnredlist.org/species/18868/97216466


இந்தளவு விவரங்களை சேகரித்தால்தான் கீழேயுள்ள படம் உருவாக்க முடியும். 





புகைப்படம் - ஐஸ்டாக்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்