தவறான செய்திக்கு விவசாயிகள் பதிலடி!
வானிலை அறிக்கைக்காக பூட்டு! –
புனே வானிலை ஆராய்ச்சிமையம், பருவமழை
பற்றிய தப்பும் தவறுமான செய்திகளை வெளியிட்டதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது
என்று விவசாய அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தைச்
சேர்ந்த ‘ஷேட்கரி சங்கர்ஸ் சமிதி’ எனும் விவசாயிகள் அமைப்பு, விவசாயிகளுக்கு நஷ்டம்
ஏற்படுத்திய வானிலை ஆராய்ச்சியை மையத்தை பூட்டப்போவதாக மிரட்டல் கடிதம் எழுதியுள்ளது.
மாவட்ட ஆட்சியர் மற்றும் சிவராஜ்நகர்
காவல்துறையினருக்கு தங்களுக்கு வந்த அக்கடித நகலை வானிலை மையத்தினர் அனுப்பி வைத்துள்ளனர்.
“வானிலை ஆராய்ச்சி மையத்தினர் பருவமழை குறித்த தவறான அறிக்கைகளை உர நிறுவனங்களுடன்
இணைந்து அளித்து ரூ.2.5 லட்ச ரூபாய்களுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். விரைவில்
அவர்கள் அலுவலகத்தை மூடவேண்டிவரும்” என்கிறார் ‘ஷேட்கரி சங்கர்ஸ் சமிதி’ அமைப்பைச்
சேர்ந்த பாய் கங்காபிஷன் தவாரே.
“மக்கள் தாங்கள் விரும்பிய சேவையைத்
தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இந்தியாவில் உண்டு. எங்கள் சேவையை சரியானமுறையில் செய்துவருகிறோம்”
என்கிறார் புனே வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி ஒருவர்.