ராஜஸ்தான் இனி ஹிந்துஸ்தான்!



Image result for hindu names for rajasthan


Related image






நட்புதின கொண்டாட்டம்!

மத்தியப்பிரதேசத்திலுள்ள ஜபல்பூரைச்சேர்ந்த பத்தாம்வகுப்பு மாணவர், நட்புதினத்திற்காக 46 லட்சரூபாய் செலவழித்து அவரின் குடும்பத்திற்கே ஷாக் கொடுத்துள்ளார்.

தொழிலதிபர் தன் வீட்டில் வைத்திருந்த பணத்தை காணவில்லை என போலீசில் புகார் கொடுத்தார். விசாரணையில், திருட்டிற்கான அணுவளவு தடயங்களும் வீட்டில் இல்லை. பிறகுதான்,  தொழிலதிபரின் மகன் நட்பு தினத்திற்காக 46 லட்சரூபாயை திருடி வெள்ளி பிரேஸ்லட், ஸ்மார்ட்போன்கள் என வகுப்பறையிலுள்ள தோழர்களுக்கு வாரிவழங்கி நவீன கர்ணனாய் பெருமிதப்பட்டது தெரியவந்தது. போலீஸ் சம்மன் அனுப்புவதற்குள்ளாக மாணவர்களின் பெற்றோர் சிலர் கார், பொருட்கள் என வாங்கிவிட கொள்ளையடித்த பணத்தில் 15 லட்சரூபாய் மட்டுமே ரிடர்ன் ஆகியுள்ளது. பணத்தோடு சென்ற தொழிலதிபரின் மகன் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. "இதில் சம்பந்தப்பட்டவர்கள் மைனர் என்பதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை" என்கிறார் சூப்பரிடெண்ட் பி.எஸ்.தோமர். மத்தியப்பிரதேசத்தில் கர்ணன் பிறந்துவிட்டார்!


2


டிஜிட்டல் ஆவணங்கள் போதும்!


சாலையில் ட்ராஃபிக் போலீஸ் கைகாட்டி வண்டிக்கான ஆவணங்களை சரிபார்க்க கேட்டால், அதனை டிஜிட்டலாக காட்டினால் கூடபோதும் என போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனால் ஒரிஜினல் ஆவணங்களை போலீசாரிடம் கொடுத்து திரும்ப பெறமுடியாமல் தடுமாறும் வேதனை இனியில்லை.

.டி சட்டப்படி(1988,2000) digilocker, mparivahan உள்ளிட்ட ஆப்ஸ்களில் சேமித்துள்ள வாகனங்களுக்கான உரிய ஆவணங்களை காட்டினால் போதுமானது. போலீசார் தம்மிடமுள்ள மொபைல்போன் மூலம் டிஜிட்டல் ஆவணங்களிலுள்ள க்யூஆர் கோடினை ஸ்கேன் செய்தாலே அதனை  சரிபார்க்க முடியும். தற்போது டிஜிலாக்கர் அனைத்து போன்களிலும் எளிதில் தரவிறக்கி பயன்படுத்தமுடியும் என்றாலும் பரிவாகன் அப்ளிகேஷன் ஆப்பிள் போன்களில் பயன்படுத்தும்படி இன்னும் ரெடியாகவில்லை. போன் டேட்டாவை ரீசார்ஜ் பண்ண மறந்தா நிலைமை என்னாகும்

3

சுத்தமான ரயில்நிலையம்!

இந்தியாவிலேயே சுத்தமான ரயில்நிலையமாக ராஜஸ்தானின் ஜோத்பூர் ரயில்நிலையம் லிஸ்ட்டில் முன்னணியில் இடம்பெற்றுள்ளது. இதற்கடுத்த இடத்தை திருப்பதி பெற்றுள்ளது.   
அண்மையில் குவாலிட்டி கவுன்சில் ஆஃப் இந்தியா(QCI) வெளியிட்ட பட்டியலில் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி, அழுக்கான ரயில்நிலையங்களைக் கொண்டுள்ள உத்தரப்பிரதேசம், ஹரியானா மாநிலங்களை விட மோசமான நிலையில் உள்ளது. கடந்தாண்டை விட ரயில்நிலையங்கள் 9 சதவிகித முன்னேற்றத்தை பெற்றுள்ளன. 75 நகரங்களைக் கொண்டுள்ள லிஸ்ட்டில் வாரணாசி பரிதாபமான சரிந்து 69 ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. ரயில்நிலையத்தின் பிளாட்பார்ம், இருப்புபாதை, உணவு, கழிவறை,குடிநீர் வசதி, பார்க்கிங் வசதி உள்ளிட்டவற்றை வைத்து மதிப்பெண்கள் அளிக்கப்படுகிறது. .பியின் மதுரா, ரயில்நிலையங்களிலேயே மிக மோசமான ரேட்டிங்கைப் பெற்றுள்ளது  


4

பெயர்களை மாற்றுவோம்!

ராஜஸ்தான் அரசு, தேர்தல்களுக்காக இஸ்லாமிய ஊர்களின் பெயர்களை திடீரென மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளது.

சிட்டோர்ஹார்- மொகம்மத்பூர், நவாப்பூர், ராம்புரா, மாண்ஃபியா ஆகிய ஊர்களின் பெயர்கள் முதல்கட்டமாக இந்து மதப்பெயர்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் நவம்பர்-டிசம்பரில் தேர்தல் தொடங்கவிருப்பதால் மேலும் பல்வேறு ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக வருவாய்த்துறை தகவல் அளித்துள்ளது. அரசு நிர்வாகரீதியிலான தோல்விகளை மறைக்க இப்படி பெயர்விளையாட்டை விளையாடுகிறது என காங்கிரஸ் விமர்சிக்க பிற அமைப்புகளும் அரசின் சீர்திருத்தம் சமூகத்தை பிளவுபடுத்தும் என கொந்தளித்துள்ளன. "இஸ்லாமியர்களை படுகொலை செய்வது, வெறுப்பு அரசியல், பாடநூல்களிலிருந்து இஸ்லாமிய எழுத்தாளர்களை விலக்குவது, உருது பள்ளிகளை மூடுவது, ஊரின் பெயர்களை மாற்றுவது என சிறுபான்மையினருக்கு இங்கு என்னதான் மிச்சமிருக்கிறது?" என ஆவேசமாக கேட்கும் முஸ்லீம் சட்டபோர்டின் உறுப்பினர் யாஸ்மீன் ஃபரூக்கியின் கேள்விக்குத்தான் நம்மிடம் பதில்களே இல்லை

5

குப்பையிலிருந்து இயற்கைவாயு

சத்தீஸ்கரின் ராய்பூர்  நகரைச் சேர்ந்த மெக்கானிக்கல் எஞ்சினியர் ஷியாம்ராவ் ஷிர்கே சாக்கடை கழிவுநீரிலிருந்து இயற்கை எரிவாயு(CNG) தயாரித்து சாதனை புரிந்துள்ளார்.

"கழிவுநீரை எடுத்து அதன்மூலம் உருவாகும் எரிவாயுவின் மூலம் தேநீர் தயாரித்து என் கண்டுபிடிப்பை நிரூபித்துள்ளேன்" என தன்னம்பிக்கையுடன் பேசிய ஷிர்கேவுக்கு சத்தீஸ்கர் அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நிதியுதவி வழங்கி எரிவாயு ஆராய்ச்சி அடுத்த கட்டத்திற்கு மேம்பட உதவியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ச்சியை அரசிடம் சமர்ப்பித்துவிட்டார் ஷிர்கே. ஆனால் எந்த முன்னேற்றமுமில்லை. அண்மையில் உயிரிஎரிவாயு தினத்தில் ஷியாம்ராவ் ஷிர்கேவின் கழிவுநீர் எரிவாயு கண்டுபிடிப்பை பிரதமர் மோடி தன் உரையில் சிலாகித்து பேச மீண்டும் அறிவியல் உலகில் ஷிர்கே அழுத்தமான  கவனம் பெற்றிருக்கிறார். ஆய்வகத்தில் மட்டுமல்ல தன் வீட்டிலும் 5 மாதங்களுக்கு மேலாக கழிவுநீர் மூலம் உருவாகும் எரிவாயுவின் மூலமே சமையல் செய்து வருகிறார் ஷிர்கே. மக்கள் சயின்டிஸ்ட் நீங்கள்தான் சார்!




பிரபலமான இடுகைகள்