பேரிடர் இழப்பால் இந்தியாவுக்கு இழப்பு எவ்வளவு?


பேரிடர் இழப்பு!


Image result for disaster management



இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் நடந்த இயற்கை பேரிடர்களால் 79.5 பில்லியன் டாலர்கள் இழப்பு நேரிட்டுள்ளதாக ஐ.நா சபையின் பேரிடர் மேலாண்மை அறிக்கை(1998-2017) தெரிவிக்கிறது.

பேரிடர் பிரச்னைகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு 151% அதிகரித்துள்ளது(78-98 காலகட்ட ஒப்பீடு). உலகளவில் இயற்கை சூழல்களால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு 2.908 ட்ரில்லியன் டாலர்களாக உள்ளது. அமெரிக்கா(944.8 பில்லியன்), சீனா(492.2 பில்லியன்), ஜப்பான்(376.3 பில்லியன்) என பேரிடர்களின் இழப்பு அட்டவணைப்படுத்தப் பட்டுள்ளது. புயல்(28.2%), வெள்ளம்(43.4%), நிலநடுக்கம் ஆகியவை ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார இழப்புகளுக்கு முக்கிய காரணிகள். பொருளாதார இழப்புக்கு 71% இயற்கை பேரிடர்களே முக்கிய காரணங்களாக 7 ஆயிரத்து 255 சம்பவங்களை ஆராய்ந்ததில் தெரிய வந்துள்ளது.
இப்பேரிடர்களால் 4.4 பில்லியன் மக்கள் காயமுற்றும், 1.3 மில்லியன் மக்கள் உயிரிழந்தும் உள்ளனர். மக்கள் உயிரிழப்பு 56 சதவிகிதமாக அதிகரிக்க நிலநடுக்கமும், சுனாமியும் காரணமாக உள்ளதை ஐ.நாவின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.