எம்எல்ஏக்களின் வருமானம்?


உங்கள் ஆண்டுவருமானம் எவ்வளவு?


Image result for mla mp salary

சாஃப்ட்வேர் எஞ்சினியரிங் படித்து அடித்து பிடித்து வேலையில் சேருபவர்களுக்கு கூட ஆண்டு வருமானம் 10 லட்சத்தை தாண்டுவது கஷ்டம். 12 ஆம் வகுப்பு படித்த விவசாயி எம்எல்ஏக்களின் தோராய ஆண்டு வருமானம் 89.88 லட்சம் என்றால் நம்புவீர்களா? 

டாப் சம்பளம் பெறுபவர்களில் முதலிடத்தில் கர்நாடக எம்எல்ஏக்களும், கடைசி இடத்தில் சத்தீஸ்கர் மாநில மக்கள் பிரதிநிதிகளும் உள்ளனர்.  தோராயமாக ஆண்டுக்கு கர்நாடக எம்எல்ஏக்கள் ஒரு கோடியும், சத்தீஸ்கர் எம்எல்ஏக்கள் ஆண்டுக்கு 5.4 லட்சமும் பெற்றுள்ளனர். 3,145 எம்எல்ஏக்களிடம் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆகிய அமைப்புகள் நடத்திய ஆய்வில் பாதிப்பேர் விவசாயமும்(24%), தொழில்களும்(25%) செய்துவருவதாக தெரிவித்தனர்.

கர்நாடகா, மகாராஷ்டிரா(43.4 லட்சம்), ஜார்க்கண்ட்(7.4 லட்சம்) ஆகிய மாநிலங்களில் எம்எல்ஏக்களின் ஆண்டுவருமானம் இந்திய மாநிலங்களிலேயே அதிகம். இவர்களில் 1,052 எம்எல்ஏக்களின் கல்வித்தகுதி 5 முதல் 12 ஆம் வகுப்பு வரைதான். அரசியல்ல குதிக்கிறது இதுக்குத்தானா?