குக்கூ நண்பர்கள் குழு
பலரைப்பற்றியும் பின்னர் எழுதுவேன். புகைப்படம் இருக்கும் இருவரைப்பற்றி முக்கியமாக கூறவேண்டியே இந்தப் பதிவு. இவர்கள் இருவரும்தான் எந்த அடையாளமும் இன்றி குக்கூவின் செயல்பாடுகளை வடிவமைத்து நெறிபடுத்துபவர்கள்.
குக்கூவின் அனைத்து செயல்பாடுகளையும் மிக நேர்த்தியாக, திட்டமிட்டு வேறு கோணத்தில் பார்த்து செம்மையுறச்செய்வதில் பீட்டர் அண்ணனுக்கு நிகர் வேறு யாருமில்லை. இவரது தங்கை பெனிட்டா மிகச்சிறந்த ஓவியர் என்பதை கூகுளில் தட்டச்சு செய்து பார்த்தால் அறிந்துகொள்ளலாம். குக்கூவின் கலைசெயல்பாடுகளில் நீக்கமற நிறைந்திருப்பது அண்ணனே.
குக்கூவின் முகமாக வெளியே தெரிவதே அண்ணன் சிவராஜ்தான். ஏறத்தாழ சித்தர் பெருமான் என்று நாங்கள் அழைத்து பெருமைப்படுத்துவதால் அண்மையில் பேண்ட் அணியத்தொடங்கியிருக்கிறார். இவரின் கவிதைத் தொகுப்பு கூழாங்கற்களின் தினம் படித்திருக்கிறீர்களா? குக்கூவிற்கான வாசகங்கள் அனைத்தும் அண்ணனின் தணிக்கைக்குப் பின்தான் வெளியிடப்படும். வெகு நேர்த்தியான புத்தகங்கள் வானகத்திலிருந்து வெளிவருகிறது என்றால் அதற்கு சித்தர்தான் காரணம்.
கருத்துகள்
கருத்துரையிடுக