இடதுசாரி வீரர்கள் 2- கங்காதர் அதிகாரி
கங்காதர் அதிகாரி(1898-1981)
பீப்பிள்ஸ் வார், பீப்பிள்ஸ் ஏஜ் உள்ளிட்ட பத்திரிகைகளின் ஆசிரியர், டாகுமெண்ட்ஸ் ஆஃப் தி ஹிஸ்டரி ஆஃப் தி சிபிஐ(நான்கு தொகுதி) நூல்களை எழுதிய மகத்தான ஆளுமைக்கு இடதுசாரி தலைவர்களின் வரிசையில் இடமேயில்லை.
பாம்பேயில் கணக்கர்களின் குடும்பத்தில் பிறந்தவர், தொடக்க கல்வி கற்றதும் அங்கேயேதான். பின்னர் கல்விக்காக பெங்களூர், ஜெர்மனி சென்றார். அரசியலுக்கு வரும் காலத்தில் இவருக்கு இன்ஸ்பிரேஷன் சுதந்திரப்போராட்ட வீரர் குதிராம் போஸ், சிவாஜி, திலகர் ஆகியோர். பள்ளியில் அறிவியல் பாடத்தில் ஆர்வம் காட்டியவர், அதற்கிணையாக பிரார்த்தனா சமாஜின் ஆர்.ஜி. பண்டார்கர் ஆகியோரின் சிந்தனைகளை பின்தொடர்ந்தார். இதில் முக்கியமான பங்கு தியான் பிரகாஷ் பத்திரிகைக்கு உண்டு.
எர்னஸ்ட் ஹெகலின் கொள்கைகளோடு போராடிய கங்காதர் அதிகாரி, சமூக மாற்றம், ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் என இரண்டு கருத்துகளுக்குமிடையே அல்லாட தொடங்கி 1928 ஆம் ஆண்டு சுதந்திரம்தான் முதலில் என முடிவெடுத்தார். டாங்கே பாம்பேயில் நடத்திய பைபிளுக்கு எதிரான இயக்கத்தினால் பெரிதும் ஈர்க்கப்பட்டார் கங்காதர் அதிகாரி. அச்சமயத்தில் எம்.ஜி. ரானடேவின் ரைஸ் ஆப் தி மராத்தா எனும் வரலாற்று எழுத்துக்களில் தன்னை கரைத்துக்கொண்டார். ஸ்வதேசி இயக்கத்தில் காந்தியையும் திலகரையும் பின்தொடர்ந்தவர் மெல்ல வரலாற்று நூல்களை பயின்றி இந்தியச்சூழலை உள்வாங்க தொடங்கினார். இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு மாற்றங்களை கூறிய ஆர்.பி. தத்தின்
மாடர்ன் இந்தியா என்ற நூலும் கங்காதருக்கு மிகவும் பிடித்து போனது.
"நாடு முதலில், மதம் பிறகுதான்" என்றவரின் பார்வை பெர்லினில் சந்தித்த உருது வட்டார நண்பர்களான ஜாகிர் உசேன், அபித் ஹூசைன், முகமது முஜீப் ஆகியோரின் நட்பினாலும் பழக்கத்தினாலும் மாறியது. கார்ல்மார்க்ஸ் நூல்கள், உலுகை உலுக்கிய பத்து நாட்கள்(ஜான் ரீடு) ஆகியவற்றை படித்து மார்க்சிய தத்துவங்கள் வழியாக இந்தியப்பிரச்னைகளுக்கு தீர்வு காண முயன்றார். "அரசியல்ரீதியாக வேறுபட்ட பலரும் மக்களுக்காக ஒன்றிணைந்து செயல்பட முயற்சித்தோம்" என 1928 ஆம் ஆண்டு கம்யூனிச வாழ்க்கையை நினைவுகூர்ந்து எழுதினார்.
தமிழில்: ச.அன்பரசு
நன்றி: பவுன்டைன் இங்க்.