இந்திய இடதுசாரிகள்- கடே முதல் நம்பூதிரிபாடு வரை -1
இடதுசாரி தலைவர்கள் - சிறிய அறிமுகம்!
2004 ஆம் ஆண்டிலிருந்தே இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் வீழ்ச்சியை சந்திக்க தொடங்கிவிட்டது. பாஜக காலத்தில் கம்யூனிசத்தை அழிக்க பல்வேற தடைகள், கைதுகள் தொடங்கிவிட்டன. சுதந்திர காலத்திலிருந்தே இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மரம் போல இல்லையென்றாலும் செடியாகவேனும் தழைத்து வளர்ந்த கம்யூனிசம் இன்று மக்களவையிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டது.
தேசியவாதம், ஜாதி, வன்முறை என கரைபுரண்டு ஓடும் இந்தியாவில் கம்யூனிஸடுகளுக்கான தேவை குறைந்துவிட்டதா என்பதை காலமே முடிவு செய்யட்டும். உள்கட்சி முரண்கள், தலைமையின் தோல்விகள், ஜாதி, பிரிவினைகளை புரிந்துகொள்வதில் தடுமாற்றம் ஆகியவை கட்சியின் செல்வாக்கு குறைந்துபோக காரணம் என மெய்ன்ஸ்ட்ரீம், தி இந்து ஆகியவை எழுதியுள்ளன.
இடதுசாரி வரலாறு என்பது கடே, டாங்கே, சுந்தரய்யா, நம்பூதிரிபாடு, ஜோதிபாசு ஆகியோர்களை உள்ளடக்கியது. 1920 ஆம் ஆண்டு தொழிற்சங்கத்தில் மத்தியதர செயல்பாட்டாளர்கள், 1930 ஆம் ஆண்டு மேல்தட்டு சோஷியலிஸ்டுகள், 1940-50 களில் அரசியல்வாதிகள் என உள்ளே நுழைந்து கம்யூனிஸ்ட் கட்சிகளை நடத்தி சென்றனர். ஜோதிபாசு, நம்பூதிரிபாடு ஆகியோரை நினைவுகூருபவர்கள் கடே, டாங்கே ஆகியோரின் பங்களிப்பை நினைத்து பார்ப்பதில்லை என்பது வரலாற்று சோகம்.
சச்சிதானந்த விஷ்ணு கடே, சிபிஐ கட்சியின் முதல் பொது செயலாளர், நியூ ஏஜ்இதழின் ஆசிரியர். சுதந்திரமடைவதற்கும், அடைந்தபிறகும் சிறைதண்டனை அனுபவித்த இடதுசாரி தலைவர்.
கங்காதர் அதிகாரி, சிபிஐயில் சேர்வதற்கு முன்பே ஜெர்மனி கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைந்தவர். சிபிஐ வரலாறு குறித்து நான்கு தொகுதிகள் நூலை தொகுத்த பெருமை கொண்ட கங்காதர், 1942 ஆம் ஆண்டு நேஷ்னல் செல்ஃப் டெட்டர்மினேஷன் என்ற ஆய்வு கட்டுரையை எழுதி புகழ்பெற்றார்.
ஸ்ரீபத் அம்ரித் டாங்கே, அனைத்திந்திய தொழில் சங்கம் மற்றும் சிபிஐ தொடங்கியவர்களில் ஒருவர். இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து மும்பை அசெம்பிளியில் வென்று உறுப்பினரானவர்.
புச்சப்பள்ளி சுந்தரய்யா, மக்கினேனி பசவ புன்னையா ஆகியோர் 1934 ஆம் ஆண்டு ஆந்திராவிலுள்ள சிபிஐயில் செயல்பட்ட முக்கியமான உறுப்பினர்கள்.
இளம்குலம் மணக்கல் சங்கரன் நம்பூதிரிபாடு(இ.எம்.எஸ்) ஜனநாயகரீதியாக 1957 ஆம் ஆண்டு கேரளாவில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் உறுப்பினர்.
1946 ஆம் ஆண்டு பொதுவாழ்க்கையைத் தொடங்கிய ஜோதிபாசு, 23 ஆண்டுகள் மேற்குவங்க முதல்வராக பதவி வகித்து சாதனை செய்தவர்.
தமிழில்: ச.அன்பரசு
நன்றி: ராகேஷ் அங்கித்,பவுன்டைன் இங்க்