அறிவியல் செய்திகளில் எது உண்மை? எது பொய்? மிஸ்டர் ரோனி




Banner, Header, Directory, Lie, Truth, Arrow, Direction








நம்பிக்கையும் உண்மையும்! 


வைரங்களை வைரங்களால்தான் வெட்ட முடியும்

வைரங்களை அறுக்கும் தொழிற்சாலைகள்தான், வைரங்களை அறுக்கும் கருவிகளில் இதனைப் பயன்படுத்துகின்றனர். வைரங்களின் அமைப்பு காரணமாக அதனை கடினமானது என்று கூறுகின்றனர். ஆனால் அனைத்து வைரங்களும் வலிமையானவை என்று கூற முடியாது. வைரத்தின் வடிவமைப்பில் பலவீனமான தன்மைகளும் உண்டு.

வண்ணத்துப்பூச்சி கால்களின் மூலம் சுவை அறிகிறது

வண்ணத்துப்பூச்சி, பூவின் மீது அல்லது இலையின் மீது அமர்ந்து டார்சி என்ற தனது கால்களின் மீது அதன் சுவையை அறிகிறது. இதற்கு அதன் கால்களிலுள்ள கீமோரெப்டார்ஸ் உதவுகின்றன. இதன்வழியாக அந்த இலை அல்லது பூவிலுள்ள தேனை உண்ணலாமா, வேண்டாமா என்பதை வண்ணத்துப்பூச்சி முடிவெடுக்கிறது.

லேசர் கதிர்களை விண்வெளியில் பார்க்க முடியாது

ஒளிக்கற்றைகளில் வலிமையானது லேசர் கதிர்கள். இவற்றை நாம் பார்ப்பது, சூழல்களில் உள்ள தூசிகள் மூலம்தான். அதில் லேசர் கதிர்கள் படும்போதுதான், அதன் போட்டான் துகள்களை நம் கண்களால் பார்க்க முடியும். விண்வெளியில் உள்ள வெற்றிடத்தில் லேசர் கதிர்கள் பாய்ந்தாலும் நம்மால் பார்க்கமுடியாது. காரணம், அங்கு லேசர் கதிர்களை பிரதிபலிக்க பொருட்கள் இல்லாததுதான்.

இளைஞர்களை விட குழந்தைகளுக்கு நூறு எலும்புகள் அதிகமாக இருக்கும்.

ஆம். குழந்தைகள் பிறக்கும்போது குருத்தெலும்புகளாக 300 எலும்புகள் இருக்கும். இவைதான், அவர்கள் கருப்பையிலிருந்து எளிமையாக வெளியே வர உதவுகின்றன. பின்னால் இவை குறைந்துபோய் இறுதியில் 206 எலும்புகள் உடலில் இறுதியாகின்றன.

ஈபிள் டவர், வெயில் காலத்தில் விரிவடைந்து 15 செ.மீ. உயரமாகிறது.

இரும்பு போன்ற உலோகங்கள் வெப்பத்தில் விரிவடைவது உண்மைதான். இதனால்தான் பெரும் உலோக கட்டமைப்புகளைக் கட்டும்போது, அதில் சிறிது இடைவெளி விட்டிருப்பார்கள். இதனால் வெப்பத்தால் விரிவடைந்தாலும் கூட அமைப்பிற்கு பாதிப்பு ஏற்படாது. திரவநிலையில் உள்ள உலோகமான பாதரசம் கூட வெப்பநிலையைப் பொறுத்து தன்மை மாறுவது நீங்கள் அறிந்ததுதானே?

கருத்துகள்